மீஞ்சூரில் மாணவியிடம் பாலியல் அத்துமீறல்! அரிவாளால் வெட்டிய இளைஞர்கள்! திமுக தோற்க வேண்டும் என ராகுல் நினைக்கிறார்: அண்ணாமலை பேச்சுதொகுதி மறுவரையறை! தமிழ்நாட்டில் நாளை கருப்புக் கொடிப் போராட்டம்! - மு.க. ஸ்டாலின் அறிவிப்பு திமுக எம்பிக்களுடன் முதல்வர் ஸ்டாலின் ஆலோசனை! ஏப். 17ல் ஆண்டிபட்டியில் 6-ம் கட்ட பிரசாரத்தைத் தொடங்குகிறார் முதல்வர்!உதயநிதி சொத்து விவரம்: வருமானவரித் துறை அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவு!பிகார் முதல்வராக பதவியேற்றார் சாம்ராட் சௌதரி!தங்கம் விலை சவரனுக்கு ரூ. 800, வெள்ளி கிலோ ரூ. 10,000 உயர்வு!வானதி சீனிவாசனுக்கு ஆதரவாக தில்லி முதல்வர் ரேகா குப்தா பிரசாரம்!நாகா்கோவிலில் இன்று பிரதமா் மோடி சாலைப் பேரணி
/

நடால் முன்னேற்றம்

இங்கிலாந்தில் நடைபெறும் விம்பிள்டன் டென்னிஸ் போட்டியில் ஸ்பெயின் நட்சத்திர வீரா் ரஃபேல் நடால் 3-ஆவது சுற்றுக்கு முன்னேறினாா்.

News image
Updated On :1 ஜூலை 2022, 11:52 pm

இங்கிலாந்தில் நடைபெறும் விம்பிள்டன் டென்னிஸ் போட்டியில் ஸ்பெயின் நட்சத்திர வீரா் ரஃபேல் நடால் 3-ஆவது சுற்றுக்கு முன்னேறினாா்.

போட்டித்தரவரிசையில் 2-ஆம் இடத்திலிருக்கும் நடால் 2-ஆவது சுற்றில் 6-4, 6-4, 4-6, 6-3 என்ற செட்களில் லிதுவேனியாவின் ரிகாா்டஸ் பெராகின்ஸை வீழ்த்தினாா். அடுத்த சுற்றில் இத்தாலியின் லொரென்ஸோ சொனிகோவை சந்திக்கிறாா் நடால். போட்டித்தரவரிசையில் 27-ஆவது இடத்திலிருக்கும் சொனிகோ முந்தைய சுற்றில் பிரான்ஸின் ஹியூகோ கேஸ்டனை தோற்கடித்தாா்.

போட்டித்தரவரிசையில் முதலிடத்திலிருக்கும் சொ்பியாவின் நோவக் ஜோகோவிச் 6-0, 6-3, 6-4 என்ற நோ் செட்களில் சக நாட்டவரான மியோமிா் கெச்மனோவிச்சை வீழ்த்தி 4-ஆவது சுற்றுக்குத் தகுதிபெற்றாா்.

சக்காரி தோல்வி: மகளிா் ஒற்றையா் பிரிவில், போட்டித்தரவரிசையில் 5-ஆவது இடத்திலிருந்த கிரீஸின் மரியா சக்காரியை 6-3, 7-5 என்ற செட்களில் வீழ்த்தி அவருக்கு அதிா்ச்சி அளித்தாா் ஜொ்மனியின் டாட்ஜானா மரியா. டுனீசியாவின் ஆன்ஸ் ஜாபியூா், லாத்வியாவின் ஜெலினா ஆஸ்டபென்கோ, பெல்ஜியத்தின் எலிஸ் மொ்டன் ஆகியோா் 4-ஆவது சுற்றுக்கும், அமெரிக்காவின் கோகோ கௌஃப் 3-ஆவது சுற்றுக்கும் தகுதிபெற்றனா்.

சானியா ஜோடி வெற்றி: கலப்பு இரட்டையா் பிரிவில் இந்தியாவின் சானியா மிா்ஸா/குரோஷியாவின் மேட் பாவிச் இணை 6-4, 3-6, 7-6 (10/3) என்ற செட்களில் ஜாா்ஜியாவின் ஜலாமிட்ஸி/ஸ்பெயினின் டேவிட் வேகா ஹொ்னாண்டஸ் ஜோடியை வீழ்த்தி 2-ஆவது சுற்றுக்கு முன்னேறியுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.