புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!மினி வேன், பைக் மீது அரசுப் பேருந்து மோதல்! குழந்தைகள் உள்பட 7 பேர் பலி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமி
/

சச்சின்,அசாரூதின் சாதனையை சமன்செய்த ஜடேஜா,ரிஷப் பந்த்

நேற்றைய டெஸ்ட் போட்டியில் ஜடேஜா, ரிஷப் பந்த் ஜோடி இணைந்து 6வது விக்கெட் பார்ட்னர்ஷிப்பில் 222 ரன்களை எடுத்து சச்சின்-அசாரூதின் சாதனையை சமன்செய்துள்ளனர். 

News image
Updated On :2 ஜூலை 2022, 5:37 am

DIN

நேற்றைய டெஸ்ட் போட்டியில் ஜடேஜா, ரிஷப் பந்த் ஜோடி இணைந்து 6வது விக்கெட் பார்ட்னர்ஷிப்பில் 222 ரன்களை எடுத்து சச்சின்-அசாரூதின் சாதனையை சமன்செய்துள்ளனர். 

இந்தியா இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான கடைசி டெஸ்ட் போட்டி நேற்று (ஜூலை-1) தொடங்கியது. இதில் ரவீந்திர ஜடேஜா - ரிஷப் பந்த் இணைந்து 6வது விக்கெட் பார்னர்ஷிப்பில் 222 ரன்களை குவித்தனர். 98-5 என்ற மோசமான நிலையில் இருந்து இந்தியாவை வலுவான நிலைக்கு கொண்டு சென்றனர். 

ரிஷப் பந்த 111 பந்துகளில் 146 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். ஜடேஜா 163 பந்தில் 83 ரன்களுடன் களத்தில் இருக்கிறார். 

இதற்கு முன்  இந்தியாவின் சார்பில் வெளிநாட்டில் 6வது விக்கெட்டில் அதிக ரன்களை எடுத்த ஜோடிகளின் பட்டியல்:

  • அசாரூதின், சச்சின்   222 (தென்னாப்ரிக்கா) 
  • ஜடேஜா, ரிஷப் பந்த்  222 (இங்கிலாந்து) 
  • அஸ்வின், சாஹா       213 (மே.இ.தீவுகள்) 
  • தோனி, இ பதான்       210 (பாகிச்தான்) 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.