பெட்ரோல், டீசல் போதிய இருப்பு: எல்பிஜி உற்பத்தி 31% அதிகரிப்பு - மத்திய அரசுஇந்தியாவுக்கான 2 எல்பிஜி சரக்கு கப்பல்கள் ஹோர்முஸ் நீரிணையைக் கடந்து பயணம்!நெல் கொள்முதல்: பிரதமருக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்! கச்சா எண்ணெய் விலை 15 நாள்களில் 40% உயர்வு!எரிபொருள் தட்டுப்பாடு.. மத்திய அரசு என்ன செய்யப் போகிறது? முதல்வர் ஸ்டாலின் கேள்வி!வைரமுத்துவுக்கு ஞானபீட விருது!உணவகங்கள், டீக்கடைகளுக்கு மின்சார மானியம்: தமிழக அரசின் அதிரடி அறிவிப்புவிளம்பர வெறிக்கு சிறுவர்களா? வெட்கமாக இல்லையா? அண்ணாமலை கேள்வி! ஈரான் தாக்குதலில் 5 அமெரிக்க டேங்கர் விமானங்கள் சேதம்!வேளச்சேரி - பரங்கிமலை ரயில் சேவை தொடங்கியது!
/

கடைசி டி20: இங்கிலாந்து வெற்றி; சூர்யகுமார் சதம் வீண்

இந்தியாவிற்கு எதிரான 3-ஆவது மற்றும் கடைசி டி20 போட்டியில்  17 ரன்கள் வித்தியாசத்தில் இங்கிலாந்து அணி வெற்றி பெற்றது. 

News image
Updated On :10 ஜூலை 2022, 5:40 pm

DIN

இந்தியாவிற்கு எதிரான 3-ஆவது மற்றும் கடைசி டி20 போட்டியில்  17 ரன்கள் வித்தியாசத்தில் இங்கிலாந்து அணி வெற்றி பெற்றது. 

இந்தியா-இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 3-வது மற்றும் கடைசி டி20 போட்டி இங்கிலாந்தில் உள்ள டிரெண்ட் பிரிட்ஜ் மைதானத்தில் நடைபெற்றது.

இந்தப் போட்டியில் முதலில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணியின் கேப்டன் ஜோஸ் பட்லர் பேட்டிங்கை தேர்வு செய்தார். 

இதனையடுத்து, இங்கிலாந்து அணியின் தொடக்க ஆட்டக்கார்களாக ஜோஸ் பட்லர் மற்றும் ஜேசன் ராய் களமிறங்கினர். இந்த இணை தொடக்கத்திலேயே அதிரடியாக ஆடியது. இருப்பினும், ஜோஸ் பட்லர் 18 ரன்களிலும், ஜேசன் ராய் 27 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். அதன்பின் களமிறங்கிய பில் சால்ட் 8 ரன்களில் ஹர்சல் படேல் பந்து வீச்சில் ஆட்டமிழந்தார். 

அதன்பின், டேவிட் மலன் மற்றும் லயன் லிவிங்ஸ்டன் ஜோடி சேர்ந்தனர். டேவிட் மலன் தொடக்கம் முதலே அபாரமன ஆட்டத்தை வெளிப்படுத்தி இந்திய அணியின் பந்துவீச்சாளர்களை திணறடித்தார். ஒவ்வொரு ஓவரிலும் சிக்சர்கள் பறந்த வண்ணமே இருந்தன. மறுமுனையில், லயம் லிவிங்ஸ்டன் அவரது பங்கிற்கு அவ்வப்போது சிக்சர்களை பறக்கவிட இங்கிலாந்து அணியின் ரன்ரேட் ஜெட் வேகத்தில் பயணித்தது. சிறப்பாக விளையாடிய டேவிட் மலன் 30 பந்துகளில் அரைசதம் கடந்தார். அரைசதம் கடந்த பின் மலன் ஆட்டத்தினை தனது பேட்டிங்கை அடுத்த கியருக்கு மாற்றினார். சிறப்பாக விளையாடிய அவர் ரவி பிஷ்னோய் வீசிய பந்தில் சிக்சர் அடிக்க முயன்று ஆட்டமிழந்தார். அவர் 39 பந்துகளில் 77 ரன்கள் குவித்தார். அதில் 6 பவுண்டரிகள், 5 சிக்சர்கள் அடங்கும். 

உம்ரான் மாலிக் வீசிய கடைசி ஓவரில் கிறிஸ் ஜோர்டான் ஒரு சிக்சர் மற்றும் ஒரு பவுண்டரி அடிக்க அந்த அணிக்கு கடைசி ஓவரில்  17 ரன்கள் கிடைத்தன. இதன்மூலம் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களின் முடிவில் இங்கிலாந்து அணி 7 விக்கெட்டுகளை இழந்து 215 ரன்கள் குவித்தது.

இந்திய அணியின் சார்பில் ரவி பிஷ்னோய் மற்றும் ஹர்சல் படேல் தலா 2 விக்கெட்டுகளையும், ஆவேஷ் கான் மற்றும் உம்ரான் மாலிக் தலா ஒரு விக்கெட்டினையும் வீழ்த்தினர்.

பின், இந்திய அணி பேட்டிங் செய்தது. தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கிய கேப்டன் ரோஹித் சர்மா மற்றும் ரிஷப் பண்ட் ஆகிய இருவரும் இங்கிலாந்து பந்துவீச்சை சமாளிக்க முடியாததால் ரோகித் 11, பண்ட் 1 ரன்களில் ஆட்டமிழந்தனர். அடுத்ததாகக் களமிறங்கிய விராட் கோலியும் 11 ரன் எடுத்திருந்த நிலையில் வில்லே பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். இருப்பினும், சூர்யகுமார் யாதவ் மற்றும் ஷ்ரேயேஸ் ஐயர் இணை அதிரடியாக ஆடினர். பின்,  ஷ்ரேயேஸ் 28 ரன்களில் ஆட்டமிழந்தாலும் மறுபக்கம் இங்கிலாந்து பந்துவீச்சை திணறடித்த சூர்யகுமார் 55 பந்துகளில் 117 ரன்களில் ஆட்டமிழந்தார்.

இங்கிலாந்து அணியின் ரேஸி டாப்ளே 3 விக்கெட்களையும், டேவிட் வில்லே மற்றும் கிரிஸ் ஜார்டன் தலா 2 விக்கெட்களையும் கைப்பற்றினர்.

இறுதியில் 20 ஓவர்கள் முடிவில்  இந்திய அணி 9 விக்கெட்களை இழந்து 198 ரன்கள் சேர்த்து 17 ரன்கள் வித்தியாசத்தில் இங்கிலாந்திடம் தோல்வியடைந்தது.

மூன்று டி20 போட்டிகள் கொண்ட தொடரில் முதல் மற்றும் இரண்டாவது டி20 போட்டிகளில் இந்திய அணி வெற்றிபெற்று தொடரைக் கைப்பற்றியது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.