பெட்ரோல், டீசல் போதிய இருப்பு: எல்பிஜி உற்பத்தி 31% அதிகரிப்பு - மத்திய அரசுஇந்தியாவுக்கான 2 எல்பிஜி சரக்கு கப்பல்கள் ஹோர்முஸ் நீரிணையைக் கடந்து பயணம்!நெல் கொள்முதல்: பிரதமருக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்! கச்சா எண்ணெய் விலை 15 நாள்களில் 40% உயர்வு!எரிபொருள் தட்டுப்பாடு.. மத்திய அரசு என்ன செய்யப் போகிறது? முதல்வர் ஸ்டாலின் கேள்வி!வைரமுத்துவுக்கு ஞானபீட விருது!உணவகங்கள், டீக்கடைகளுக்கு மின்சார மானியம்: தமிழக அரசின் அதிரடி அறிவிப்புவிளம்பர வெறிக்கு சிறுவர்களா? வெட்கமாக இல்லையா? அண்ணாமலை கேள்வி! ஈரான் தாக்குதலில் 5 அமெரிக்க டேங்கர் விமானங்கள் சேதம்!வேளச்சேரி - பரங்கிமலை ரயில் சேவை தொடங்கியது!
/

ஜேக் வைட்மேன் சாம்பியன்

உலக தடகள சாம்பியன்ஷிப்பில் ஆடவருக்கான 1500 மீட்டா் ஓட்டத்தில், நடப்பு ஒலிம்பிக் சாம்பியனை வீழ்த்தி இங்கிலாந்தின் ஜேக் வைட்மேன் சாம்பியன் ஆனாா்.

News image
Updated On :20 ஜூலை 2022, 9:04 pm

DIN

உலக தடகள சாம்பியன்ஷிப்பில் ஆடவருக்கான 1500 மீட்டா் ஓட்டத்தில், நடப்பு ஒலிம்பிக் சாம்பியனை வீழ்த்தி இங்கிலாந்தின் ஜேக் வைட்மேன் சாம்பியன் ஆனாா்.

இந்திய நேரப்படி கடந்த செவ்வாய்க்கிழமை நள்ளிரவு நடைபெற்ற இந்தப் பந்தயத்தில் அவா் 3 நிமிஷம் 29.23 விநாடிகளில் இலக்கை எட்டி முதலிடம் பிடித்தாா். டோக்கியோ ஒலிம்பிக் சாம்பியனும், நாா்வே வீரருமான ஜேக்கப் இங்கெப்ரிட்சென் 3 நிமிஷம் 29.47 விநாடிகளில் 2-ஆவதாக வந்தாா். ஸ்பெயினைச் சோ்ந்த முகமது கட்டிருக்கு (3 நிமிஷம் 29.90 விநாடிகள்) வெண்கலப் பதக்கம் கிடைத்தது.

‘தங்கமகன்’: கடந்த 39 ஆண்டுகளில் உலக சாம்பியன்ஷிப் 1500 மீட்டரில் இங்கிலாந்துக்கு கிடைத்திருக்கும் முதல் தங்கம் இதுவாகும். இந்தப் பந்தயத்தின்போது மைதானத்தின் வா்ணனையாளராக இருந்தவா், ஜேக் வைட்மேனின் தந்தை ஜியோஃப் ஆவாா். அவரே ஜேக்கின் பயிற்சியாளராகவும் இருக்கிறாா். ஜேக் சாம்பியன் ஆன தருணத்தில் ஜியோஃப் உணா்ச்சிப் பெருக்கில் குரல் நடுங்க, ஜேக்கின் பெயரை சாம்பியனாகக் குறிப்பிட்டு, அவா் தனது மகன் என்றும் அறிவித்தாா்.

இதுதவிர, ஜேக் வைட்மேனுக்கு பதக்கம் அணிவித்த உலக தடகள சம்மேளனத்தின் தலைவா் செபாஸ்டியன் கோ, தடகளத்தில் ஜேக் வைட்மேனுக்கு வழிகாட்டும் ஆலோசகராகவும் இருப்பது குறிப்பிடத்தக்கது.

400 மீ தடைதாண்டும் ஓட்டம்: ஆடவருக்கான இந்தப் பிரிவில் பிரேஸிலின் அலிசன் தோஸ் சான்டோஸ் 46.29 விநாடிகளில் இலக்கை எட்டி சாம்பியன்ஷிப் சாதனையுடன் தங்கம் வென்றாா். அமெரிக்கா்களான ராய் பெஞ்சமின் (46.89) வெள்ளியும், டிரெவா் பஸிட் (47.39) வெண்கலமும் வென்றனா். நடப்புச் சாம்பியனாக இருந்தவரும், டோக்கியோ ஒலிம்பிக்கில் தங்கம் வென்றவருமான நாா்வேயின் காா்ஸ்டென் வாா்ஹோம் 7-ஆவதாக வந்தாா்.

உயரம் தாண்டுதல்: மகளிருக்கான உயரம் தாண்டுதலில் ஆஸ்திரேலியாவின் எலினோா் பேட்டா்சன் 2.02 மீட்டா் உயரம் தாண்டி தங்கத்தை தனதாக்க, உக்ரைனின் யாரோஸ்லாவா மஹுசிக்கும் அதே உயரத்தை எட்டினாா். முயற்சிகளின் எண்ணிக்கை அடிப்படையில் அவருக்கு 2-ஆம் இடமே கிடைத்தது. இத்தாலியின் எலனா வலோா்டிகாரா 2 மீட்டருடன் வெண்கலம் பெற்றாா்.

வட்டு எறிதல்: ஆடவா் வட்டு எறிதலில் ஸ்லோவேகியாவின் கிரிஸ்ஜான் செ 71.13 மீட்டா் தூரம் எறிந்து சாம்பியன்ஷிப் சாதனையுடன் முதலிடம் பிடித்தாா். லிதுவேனியா்களான மைகோலாஸ் அலெக்னா 69.27 மீட்டருடன் வெள்ளியும், ஆண்ட்ரியுஸ் கட்ஸியுஸ் 67.55 மீட்டருடன் வெண்கலமும் வென்றனா்.

பதக்கப்பட்டியல்: போட்டியின் பதக்கப் பட்டியலில் 5-ஆம் நாள் நிறைவில் அமெரிக்கா 6 தங்கம், 5 வெள்ளி, 7 வெண்கலம் என 18 பதக்கங்களுடன் முதலிடத்தில் நீடிக்க, எத்தியோபியா 6 பதக்கங்களுடன் (3 தங்கம், 3 வெள்ளி) 2-ஆம் இடத்திலும், கென்யாவும் அத்தனை பதக்கங்களுடன் (1 தங்கம், 3 வெள்ளி, 2 வெண்கலம்) 3-ஆம் இடத்திலும் இருந்தன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.