ரஜினி அங்கிளைப் பார்த்தேன்: செஸ் வீரர் பிரக்ஞானந்தா (படங்கள்)
தமிழகத்தைச் சேர்ந்த பிரபல செஸ் வீரர் பிரக்ஞானந்தா, நடிகர் ரஜினிகாந்தைச் சந்தித்ததாக ட்விட்டரில் தகவல் தெரிவித்துள்ளார்.
இந்த வருடம் மூன்று போட்டிகளை வென்ற பிரக்ஞானந்தா, உலக சாம்பியன் கார்ல்சனை இருமுறை வீழ்த்தியுள்ளார். சென்னை ஒலிம்பியாட் போட்டியில் இந்தியாவின் பி அணியில் பிரக்ஞானந்தா இடம்பெற்றுள்ளார்.
இந்நிலையில் ரஜினியைச் சந்தித்தது பற்றி ட்விட்டரில் பிரக்ஞானந்தா கூறியதாவது:
மறக்க முடியாத நாள். ரஜினி அங்கிளை என் குடும்பத்தினருடன் இன்று சந்தித்தேன். இவ்வளவு உயரத்துக்குச் சென்றபிறகும் பணிவுடன் அவர் இருப்பது ஊக்கமளிக்கிறது. மகிழ்ச்சி என்று கூறியுள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.