லார்ட்ஸ் டெஸ்ட்: 132 ரன்களுக்கு நியூசிலாந்து ஆட்டமிழப்பு

இங்கிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் ஆட்டத்தின் முதல் இன்னிங்ஸில் நியூசிலாந்து அணி 132 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.
லார்ட்ஸ் டெஸ்ட்: 132 ரன்களுக்கு நியூசிலாந்து ஆட்டமிழப்பு


இங்கிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் ஆட்டத்தின் முதல் இன்னிங்ஸில் நியூசிலாந்து அணி 132 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.

இங்கிலாந்து, நியூசிலாந்து அணிகளுக்கிடையிலான முதல் டெஸ்ட் ஆட்டம் லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் இன்று (வியாழக்கிழமை) தொடங்கியது. டாஸ் வென்ற நியூசிலாந்து கேப்டன் கேன் வில்லியம்சன் முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தார்.

இங்கிலாந்துக்கு ஜேம்ஸ் ஆண்டர்சன் சிறப்பான தொடக்கத்தைத் தந்தார். முதலில் வில் யங் (1) விக்கெட்டையும், அடுத்தது டாம் லாதம் (1) விக்கெட்டையும் வீழ்த்தினார். தொடர்ந்து களமிறங்கிய டெவான் கான்வேவை (3) ஸ்டுவர்ட் பிராட் வீழ்த்தினார்.

இதன்பிறகு, அறிமுக வேகப்பந்துவீச்சாளர் மேத்யூ பாட்ஸ் ஆதிக்கம் செலுத்தத் தொடங்கினார். கேன் வில்லியம்சன் (2), டேரில் மிட்செல் (13), டாம் பிளண்ட்வெல் (14) ஆகியோரை அடுத்தடுத்து ஆட்டமிழக்கச் செய்தார்.

தொடர்ந்து விக்கெட்டுகள் சரிந்துகொண்டே இருந்ததால், நியூசிலாந்தால் பாட்னர்ஷிப்பை கட்டமைக்க முடியவில்லை. பின்னர், கைல் ஜேமிசன் (6), அதிரடியாக விளையாடிய டிம் சௌதி (26) ஆகியோரை மீண்டும் ஆண்டர்சன் வீழ்த்தினார்.

கடைசி இரண்டு விக்கெட்டுகளை முறையே மேத்யூ பாட்ஸ் மற்றும் கேப்டன் பென் ஸ்டோக்ஸ் வீழ்த்தினர்.

நம்பிக்கையளிக்கும் வகையில் விளையாடிய காலின் டி கிராண்ட்ஹோம் அதிகபட்சமாக இறுதிவரை ஆட்டமிழக்காமல் 42 ரன்கள் சேர்த்தார்.

இதன்மூலம், 40 ஓவர்கள் பேட் செய்த நியூசிலாந்து அணி முதல் இன்னிங்ஸில் 132 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. இங்கிலாந்து தரப்பில் ஆண்டர்சன் மற்றும் பாட்ஸ் தலா 4 விக்கெட்டுகளையும், பிராட் மற்றும் ஸ்டோக்ஸ் தலா 1 விக்கெட்டையும் வீழ்த்தினர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com