வணிக சிலிண்டர் விநியோகம் நிறுத்தம்! இந்தியன் ஆயில் நிறுவனம் அறிவிப்பு! ஈரானை 20 மடங்கு அதிகமாக தாக்குவோம்! டிரம்ப் எச்சரிக்கை எரிவாயு தட்டுப்பாடு! பாகிஸ்தானில் 2 வாரங்களுக்கு பள்ளி, கல்லூரிகள் விடுமுறை! இந்திய பங்குச்சந்தை உயர்வுடன் வர்த்தகம்! அமெரிக்காவுடன் சமரசம்! தகவலை வெளியிட்டால் மோடி பதவி விலக நேரிடும்! சுப்ரமணியன் சுவாமிசமையல் எரிவாயு சிலிண்டர் தட்டுப்பாடு? தமிழக அரசு அவசர ஆலோசனை!சமையல் எரிவாயு சிலிண்டர் வாங்க 25 நாள்கள் கால இடைவேளை!
/

ஹேசல்வுட்டுக்கு ஆஸ்திரேலியா டி20 அணியில் அதிகமான வாய்ப்பு வழங்க வேண்டும் : ஷேன் வாட்சன் கருத்து

ஆஸ்திரேலியாவின் வேகப்பந்து வீச்சாளர் ஜோஸ் ஹேசல்வுட்க்கு ஆஸ்திரேலியா டி20 அணியில் அதிகமான வாய்ப்பு வழங்க வேண்டும் என ஷேன் வாட்சன் கருத்துத் தெரிவித்துள்ளார். 

News image
படம்: டிவிட்டர், கிரிக்கெட் ரூம்ஸ் | ஜோஸ் ஹேசல்வுட்
Updated On :7 ஜூன் 2022, 6:35 am

DIN

ஆஸ்திரேலியாவின் வேகப்பந்து வீச்சாளர் ஜோஸ் ஹேசல்வுட்க்கு ஆஸ்திரேலியா டி20 அணியில் அதிகமான வாய்ப்பு வழங்க வேண்டும் என ஆஸ்திரேலியாவின் முன்னாள்  கிரிக்கெட் வீரர் ஷேன் வாட்சன் கருத்துத் தெரிவித்துள்ளார். 

ஹேசல்வுட் ஐபிஎல் வரலாற்றில் சென்னை சூப்பர் கிங்ஸ் (2021), ராயல் சேலங்சர்ஸ் பெங்களூரு (2022) அணிகளுக்காக வெற்றிகரமாக விளையாடி உள்ளார். 2021 ஐக்கிய அரபு அமீரகத்தில் நடந்த டி20 உலக கோப்பை போட்டியிலும் சிறப்பாக பந்து வீசினார். அதில் ஆஸ்திரேலியா கோப்பையை வென்றதும் குறிப்பிடத்தக்கது. 

ஆஸ்திரேலியாவின் முன்னாள்  கிரிக்கெட் வீரர் ஷேன் வாட்சன் ஜோஸ் ஹேசல்வுட் பற்றி கூறியதாவது: 

நான் எப்போதும் அவரை டெஸ்ட் அல்லது ஒருநாள் கிரிக்கெட் பவுலராகவே நினத்தேன். ஏனெனில் டி20யில் அதிகமான மாறுபாடுகள் வேண்டும். ஆனால் சில வருடங்களாக அவர் அபாரமான டி20 பவுலராக உருவாகியுள்ளார். அவர் 2021இல் சிஎஸ்கே அணிக்காக விளையாடியது 2021 உலக கோப்பைக்கு முன்பு மிகப்பெரிய நல்வாய்ப்பாக அமைந்தது. தற்போது ஆஸ்திரேலியாவின் மிகச்சிறந்த டி20 பவுலர் அவர்தான். இதில் சந்தேகமே இல்லை. 

சொந்த மண்ணில் விளையாடும் போது ஹேசல்வுட்க்கு புதியதாக எதுவும் செய்ய வேண்டியதில்லை. யார்கர், ஸ்லோ பந்து, ஸ்டாக் பந்து ஆகிய அவரது வலுவான யுக்திகளே போதும்.

ஆஸ்திரேலியாவில் பிட்ச் சிறிது ஸ்லோவாக இருக்கும். அதனால் அவரது லென்ந்தில் வீசும் பந்துகள் மிகவும் பயனுள்ளதாக இருக்கும். அவருக்கு ஆஸ்திரேலியா டி20 அணியில் இன்னும் அதிகமான வாய்ப்புகள் வழங்க வேண்டும். அவருடன் பாட் கம்மின்ஸ், மிட்செல் ஸ்டார்க் சேரும்போது அணி மிக  வலுவாக இருக்கும். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.