வீடுகளுக்கு சமையல் எரிவாயு சிலிண்டா் தடையற்ற விநியோகம்: மத்திய அரசு மீண்டும் உறுதி6 மாநிலங்களுக்கு ரூ.1,912 கோடி கூடுதல் பேரிடா் நிதி: குஜராத்துக்கு மட்டும் ரூ. 778.67 கோடி ஒதுக்கீடுமத்திய அரசைக் கண்டித்து திமுக கூட்டணி கட்சிகள் நாளை ஆா்ப்பாட்டம்ஈரானின் புதிய தலைமை மதகுரு உயிருக்கும் உத்தரவாதம் இல்லை: இஸ்ரேல் பிரதமா் எச்சரிக்கை5 ஆண்டுகளில் 6,800 ஸ்டாா்ட்-அப் நிறுவனங்கள் மூடல்: தகவல் தொழில்நுட்பம், சுகாதாரத் துறைகள் கடும் பாதிப்பு
/

ரசிகர்களின் எதிர்பார்ப்பை பொய்யாக்கிய ருத்துராஜ்

ருத்துராஜின் அசத்தல் அரை சதத்தின் காரணமாக இந்திய அணி 10 ஓவர் முடிவில் 1 விக்கெட் இழப்புக்கு 97 ரன்கள் எடுத்துள்ளது. 

News image
Updated On :14 ஜூன் 2022, 2:24 pm

DIN

ருத்துராஜின் அசத்தல் அரை சதத்தின் காரணமாக இந்திய அணி 10 ஓவர் முடிவில் 1 விக்கெட் இழப்புக்கு 97 ரன்கள் எடுத்துள்ளது. 

இந்தியா - தென்னாப்பிரிக்கா அணிகளுக்கான 3வது டி20 போட்டியில் டாஸ் வென்ற தென்னாப்பிரிக்கா அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. ருத்துராஜ் கெய்க்வாட் மற்றும் இஷான் கிஷன் ஆகியோர் துவக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கினர். 

துவக்க முதலே ருத்துராஜ் கெய்க்வாட் அதிரடி காட்டத் துவங்கினார். பந்துகளை நான்கு புறமும் சிதறடித்த ருத்துராஜ் 30 பந்துகளில் அரை சதம் அடித்தார். சர்வதேச போட்டிகளில் இது அவரது முதல் அரை சதம் என்பது குறிப்பிடத்தக்கது. 

கிஷனும் தன் பங்குக்கு அதிரடி காட்டினார். இதன் காரணமாக 10 ஓவர்களில் இந்திய அணி குவித்தது. கேசவ் மகாராஜ் வீசிய 10வது ஓவர் இறுதி பந்தில் ருத்துராஜ் அவரிடமே கேட்ச் கொடுத்து இந்திய ரசிகர்களின் எதிர்பார்ப்பை பொய்யாக்கினார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.