கவாஸ்கரை முந்திய ஜோ ரூட்
இங்கிலாந்து வீரர் ஜோ ரூட் டெஸ்ட்போட்டிகளில் 10191 ரன்களை எடுத்ததன் மூலம் சுனில் கவாஸ்கரை பின்னுக்குத் தள்ளி தரவரிசைப் பட்டியலில் 12வது இடத்துக்கு முன்னேறியுள்ளார்.

ஜோ ரூட்

ஜோ ரூட்
இங்கிலாந்து வீரர் ஜோ ரூட் டெஸ்ட் போட்டிகளில் 10191 ரன்களை எடுத்ததன் மூலம் சுனில் கவாஸ்கரை பின்னுக்குத் தள்ளி தரவரிசைப் பட்டியலில் 12வது இடத்துக்கு முன்னேறியுள்ளார்.
நியூசிலாந்துக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் 4ஆம் நாள் ஆட்டத்தில் 176 ரன்களை எடுத்து ஜோ ரூட் ஆட்டமிழந்தார். அதன்படி சுனில் கவாஸ்கரின் 10122ஐ தாண்டியுள்ளார். இதன் மூலம் தர வரிசையில் 12வது இடத்துக்கு முன்னேறியுள்ளார். கவாஸ்கர் 13வது இடத்துக்கு தள்ளப்பட்டார்.
இங்கிலாந்து அணிக்கு எதிராக நியூசிலாந்து அணி 4 நாள் ஆட்ட முடிவில் 224 ரன்களுக்கு 7விக்கெட்டுகளை இழந்துள்ளது. இன்று இந்திய நேரப்படி மாலை 3.30க்கு 5ம் நாள் ஆட்டம் தொடங்கவிருக்கிறது.
டெஸ்ட் போட்டியில் அதிக ரன்கள் எடுத்தவர்கள்
சச்சின் டெண்டுல்கர் 15921
ரிக்கி பாய்ண்டிங் 13378
ஜேக் காலிஸ் 13289
இதையும் படிக்க: 2021 முதல் டெஸ்ட் கிரிக்கெட்டில் ரன்களைக் குவித்து வரும் ஜோ ரூட்
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...