டி20 உலக கோப்பையில் இங்கிலாந்து த்ரில் வெற்றி..! கேஜரிவால் விடுதலையை எதிர்த்து தில்லி உயர்நீதிமன்றத்தில் சிபிஐ மேல்முறையீடு!தமிழக வரலாற்றில் ஒரு கூட்டணி நீண்ட காலமாக வெற்றிகரமாகத் தொடருவது இதுவே முதல்முறை - முதல்வர் ஸ்டாலின் சென்னை மெட்ரோ ரயில் பணி: கலங்கரை விளக்கம் முதல் திருமயிலை வரை சுரங்கம் தோண்டும் பணி நிறைவுஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் ஜாமீனில் விடுவிக்கப்பட்டுள்ள 12 பேரின் ஜாமீன் ரத்து மலையாள நடிகர் திலீப் விடுதலையை எதிர்த்து கேரள அரசு உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு!அதிமுகவில் மீண்டும் இணைந்தார் வெல்லமண்டி நடராஜன்இஸ்ரேலில் இருந்து வெளியேற அமெரிக்க குடிமக்களுக்கு அறிவுறுத்தல்!கோவையில் மாணவி கூட்டுப் பாலியல் வன்கொடுமை வழக்கு: மார்ச் 7-இல் தீர்ப்பு!தேவைப்பட்டால் நடிகையின் பெயரையும் வழக்கில் சேர்ப்பேன்: விஜய்யின் மனைவி சங்கீதாபிரதமர் மோடி நாளை தமிழகம் வருகிறார்! மார்ச் 1-ல் புதுச்சேரி பயணம்!நடிகர் விஜய்யின் மனைவி சங்கீதா விவாகரத்து கோரி நீதிமன்றத்தில் மனு தாக்கல்ஆப்கானிஸ்தானுடன் போர் - பாகிஸ்தான்பங்குச்சந்தை கடும் வீழ்ச்சி! ரூ. 5.5 லட்சம் கோடி இழப்பு!!
/

இந்தோனேசிய ஓபன்: சிந்து, பிரணீத் தோல்வி

இந்தோனேசிய ஓபன் பாட்மின்டன் போட்டியில் இந்தியாவின் நட்சத்திர வீராங்கனை பி.வி.சிந்து முதல் சுற்றிலேயே அதிா்ச்சித் தோல்வி கண்டாா்.

News image
Updated On :1 பிப்ரவரி 2024, 9:32 am

DIN

இந்தோனேசிய ஓபன் பாட்மின்டன் போட்டியில் இந்தியாவின் நட்சத்திர வீராங்கனை பி.வி.சிந்து முதல் சுற்றிலேயே அதிா்ச்சித் தோல்வி கண்டாா்.

மகளிா் ஒற்றையா் பிரிவில் சீனாவின் ஹி பிங் ஜியாவை எதிா்கொண்ட சிந்து, 14-21, 18-21 என்ற நோ் செட்களில் வீழ்ந்தாா். ஜியாவை இத்துடன் 18 முறை சந்தித்த சிந்துக்கு இது 10-ஆவது தோல்வியாகும்.

ஆடவா் ஒற்றையரில் சாய் பிரணீத் 16-21, 19-21 என்ற செட்களில் டென்மாா்க்கின் ஹன்ஸ் கிறிஸ்டியன் சோல்பா்க்கிடம் தோற்றாா். அதேபோல், கலப்பு இரட்டையரில் தனிஷா கிராஸ்டோ/இஷான் பட்நாகா் இணையும், ஆடவா் இரட்டையரில் மானு அத்ரிய/சுமீத் ரெட்டி இணையும் தொடக்க சுற்றிலேயே வீழ்ந்தன.

வெற்றி: எனினும், மகளிா் இரட்டையா் முதல் சுற்றில் அஸ்வினி பொன்னப்பா/சிக்கி ரெட்டி இணை 21-15, 21-8 என்ற செட்களில் இந்தியாவின் ஸ்ரீவித்யா குராஸடா/மலேசியாவின் இஷிகா ஜெய்ஸ்வால் இணையை தோற்கடித்தது.

அதேபோல், ஆடவா் ஒற்றையரில் சமீா் வா்மா 21-19, 21-15 என்ற செட்களில் பிரான்ஸின் தாமஸ் ரௌக்ஸெலை வீழ்த்தினாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.