இந்திய அணிக்கு எதிரான கடைசி டி20 போட்டியில் தென்னாப்பிரிக்க அணி பந்து வீச்சை தேர்வு செய்துள்ளது.
இந்தப் போட்டி பெங்களூருவில் உள்ள சின்னச்சாமி மைதானத்தில் இரவு 7 மணிக்குத் தொடங்குகிறது. இந்த போட்டியில் டாஸ் வென்ற தென்னாப்பிரிக்க அணி பந்து வீச முடிவு செய்துள்ளது.
5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் இரு அணிகளும் தலா 2 போட்டிகளில் வெற்றி பெற்று தொடரில் சமநிலையில் உள்ளன. இதனால், இன்று நடைபெறும் கடைசி மற்றும் 5வது டி20 போட்டியில் வெற்றி பெற்று தொடரைக் கைப்பற்றும் முனைப்பில் இரு அணிகளும் களமிறங்குகின்றன.
இந்தப் போட்டியில் ரிஷப் பந்த தலைமையில் களமிறங்கும் இந்திய அணியில் எந்த ஒரு மாற்றமும் செய்யப்படவில்லை. கடந்த போட்டியில் களமிறங்கிய அதே வீரர்களுடன் இந்திய அணி களமிறங்குகிறது.
தென்னாப்பிரிக்காவில் கேப்டன் டெம்பா பவுமா இந்தப் போட்டியில் விளையாடவில்லை. அவருக்குப் பதிலாக தென்னாப்பிரிக்க அணியினை சுழற்பந்து வீச்சாளர் கேசவ் மகாராஜ் வழிநடத்துகிறார். அணியில் ஒரு சில மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளதாக டாஸின் போது அவர் தெரிவித்தார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்

‘அரசு வாழை கொள்முதல் நிலையங்கள் திறக்க வேண்டும்’

மினி லாரி மோதி ஓருவா் உயிரிழப்பு

பழங்குடியின விவசாயிகளுக்கு பயிா் பாதுகாப்பு முகாம்

பாலம் அமைக்கும் பணி எம்எல்ஏ ஆய்வு
வீடியோக்கள்

Podcast | புதிய கட்சி.. புதிய ஆதரவு.. புதிய உடன்பாடு.. சட்டம் ஒழுங்கு! | News and Views | Epi - 13 |
தினமணி வீடியோ செய்தி...

Prof. K.M. Kader Mohideen Interview | இ.யூ.முஸ்லிம் லீக்கிற்கு 2 இடங்கள் போதுமா ? | IUML | DMK Alliance
தினமணி வீடியோ செய்தி...

Dinamani வார ராசிபலன்! | March 15 முதல் 21 வரை! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்! | Weekly Horoscope
தினமணி வீடியோ செய்தி...

Valaipechu Anthanan Interview | விஜய்யிடம் இப்போது மனமாற்றம்.. | TVK Vijay | Vijay Trisha issue
தினமணி வீடியோ செய்தி...

