தமிழக ஆளுநராக ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் - ஆர். என். ரவி மேற்கு வங்க ஆளுநராக மாற்றம் இறுதிப்போட்டியில் இந்தியா! இங்கிலாந்தை வீழ்த்தி அபாரம்!லடாக் துணைநிலை ஆளுநர் பதவி விலகல்?தமிழ்நாடு ஆளுநராக அஜய்குமார் பல்லா?மத்திய கிழக்கில் பதற்றம்: சிபிஎஸ்இ தேர்வுகள் ரத்து!மேற்கு வங்க ஆளுநர் ராஜிநாமா! ஆர்.என். ரவி நியமனம்!இந்தியாவுக்கு எரிவாயு வழங்க ஆஸ்திரேலியா, கனடா முடிவு?தேர்தல் விதிமீறல்: ஓபிஎஸ் மீதான 4 வழக்குகள் ரத்து!ஈரானின் தலைவர் கமேனி கொலை! - இந்தியா இரங்கல்!ராணுவ மோதல் பிரச்னைக்குத் தீர்வு அல்ல: பிரதமர் மோடிஈரான் வெளியுறவு அமைச்சருடன் ஜெய்சங்கர் உரையாடல்!சென்செக்ஸ் 900 புள்ளிகள் உயர்வு! ஐடி பங்குகள் மட்டும் சரிவு!
/

இனி தோற்கக் கூடாது: மே.இ. தீவுகள் பயிற்சியாளர் விருப்பம்

இந்த வருடம் எந்த டெஸ்டிலும் மேற்கிந்தியத் தீவுகள் அணி தோற்கக் கூடாது என பயிற்சியாளர் பில் சிம்மன்ஸ் கூறியுள்ளார்.

News image
பிராத்வெயிட் (கோப்புப் படம்)
Updated On :20 ஜூன் 2022, 9:46 am

DIN

இந்த வருடம் எந்த டெஸ்டிலும் மேற்கிந்தியத் தீவுகள் அணி தோற்கக் கூடாது என பயிற்சியாளர் பில் சிம்மன்ஸ் கூறியுள்ளார்.

நார்த் சவுண்டில் நடைபெற்ற வங்கதேசத்துக்கு எதிரான முதல் டெஸ்டை 7 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது மேற்கிந்தியத் தீவுகள் அணி. இதற்கு முன்பு சொந்த மண்ணில் இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரை 1-0 என வென்றது.

வெற்றிக்குப் பிறகு மேற்கிந்தியத் தீவுகள் அணியின் பயிற்சியாளர் பில் சிம்மன்ஸ் கூறியதாவது:

2021-ல் இப்படித்தான் ஆரம்பித்தோம். வங்கதேசத்தில் இரு டெஸ்டுகளில் வென்றோம். இலங்கைக்கு எதிராக இரு டெஸ்டுகளை டிரா செய்தோம். இதற்குப் பிறகு நாங்கள் எப்படி முன்னேறுகிறோம் என்பதில் தான் இருக்கிறது. இந்த வருடம் நாங்கள் விளையாடவுள்ள நான்கு, ஐந்து டெஸ்டுகளிலும் தோற்கக் கூடாது. அப்படி நடக்கவேண்டும் என விரும்புகிறேன். வீரர்கள் நம்பிக்கையுடன் விளையாடுகிறார்கள். இது உங்கள் வேலையை எளிதாக்குகிறது. நம்பிக்கையுடன் இங்கிலாந்துக்கு எதிராக விளையாடியதால் டெஸ்ட் தொடரை வென்றோம். கேப்டன் பிராத்வெயிட் ஐந்து நாள்களுக்கும் பேட்டிங் செய்யத் தயாராக உள்ளார். தற்போது பல பேட்டர்கள் அதிரடியாக விளையாட முயலும்போது இவர் தனித்துவமாக உள்ளார். ஒரு கேப்டனாக உணர்வுகளைப் பெரிய விதத்தில் அவர் வெளிப்படுத்த மாட்டார். ஆனால் அவர் என்ன எதிர்பார்க்கிறார் என்பதை வீரர்கள் அறிவார்கள் என்றார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.