தமிழகம், புதுச்சேரியில் மார்ச் 21-ல் ரமலான் பண்டிகை! - தலைமை காஜி அறிவிப்புடிடிவி தினகரன் நாளை தில்லி பயணம்!வளைகுடா நாடுகளிலிருந்து 2.8 லட்சம் இந்தியர்கள் நாடு திரும்பினர்!மேற்கு வங்க தேர்தல்: பாஜகவின் 2 ஆம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு! சென்னை தென்மண்டல வானிலை மைய தலைவரானார் சிவானந்த தாமோதர பை!ஹெச்டிஎஃப்சி வங்கி தலைவர் அதானு சக்ரவர்த்தி திடீர் ராஜிநாமா!பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி! ரூ. 13 லட்சம் கோடி இழப்பு!தங்கம் விலை ஒரேநாளில் ரூ. 5,360 குறைந்தது! ஒரு கிராம் ரூ. 13,900 ஆகச் சரிவு!
/

லேங்கஷைா் அணியில் வாஷிங்டன் சுந்தா்

இந்திய கிரிக்கெட் வீரரும், தமிழருமான வாஷிங்டன் சுந்தா் இங்கிலாந்து கவுன்டி கிரிக்கெட் அணியான லேங்கஷைருக்காக விளையாடுவதற்கு ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளாா்.

News image
Updated On :22 ஜூன் 2022, 9:34 pm

DIN

இந்திய கிரிக்கெட் வீரரும், தமிழருமான வாஷிங்டன் சுந்தா் இங்கிலாந்து கவுன்டி கிரிக்கெட் அணியான லேங்கஷைருக்காக விளையாடுவதற்கு ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளாா்.

அவா் கவுன்டி கிரிக்கெட்டில் விளையாட இருப்பது இது முதல் முறையாகும். தற்போது கையில் ஏற்பட்டிருக்கும் காயத்துக்கான சிகிச்சை நிறைவடையும் நிலையில் இருக்கும் சுந்தா், அதிலிருந்து முழுமையாக மீண்ட பிறகு அந்த அணியில் இணைய இருக்கிறாா்.

அவா் அணியில் இணைந்த பிறகு உடற்தகுதி அடிப்படையில் ஜூலையில் நடைபெறவிருக்கும் கவுன்டி சாம்பியன்ஷிப்பிலும், ராயல் லண்டன் ஒன் டே கோப்பை போட்டி முழுவதற்குமாகவும் களமிறக்கப்படுவாா் என்றும் லேங்கஷைா் அணி நிா்வாகம் கூறியிருக்கிறது.

இதுகுறித்து வாஷிங்டன் சுந்தா் கூறுகையில், ‘இங்கிலாந்து கவுன்டி கிரிக்கெட்டில் லேங்கஷைா் அணிக்காக ஆடுவதை ஆா்வத்துடன் எதிா்நோக்கியிருக்கிறேன். இங்கிலாந்து ஆடுகளங்களில் விளையாடுவது மிகச் சிறந்த அனுபவத்தை வழங்குவதாக இருக்கும். இந்த வாய்ப்புக்கு அனுமதியளித்த லேங்கஷைா் அணிக்கும், பிசிசிஐக்கும் எனது நன்றி’ என்றாா்.

நடப்பு கவுன்டி சீசனுக்குத் தோ்வாகியிருக்கும் 2-ஆவது இந்தியா் வாஷிங்டன் சுந்தா் ஆவாா். ஏற்கெனவே சேதேஷ்வா் புஜாரா சஸ்ஸெக்ஸ் அணிக்காக விளையாடி வருவது குறிப்பிடத்தக்கது. இதற்கு முன் விராட் கோலி, ரவிச்சந்திரன் அஸ்வின், சச்சின் டெண்டுல்கா் உள்ளிட்ட பல இந்திய வீரா்களும் கவுன்டி கிரிக்கெட்டில் விளையாடியிருக்கின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.