இங்கிலாந்துக்குச் சுற்றுப்பயணம் செய்துள்ள இந்திய அணி ஒரு டெஸ்ட், 3 ஒருநாள், 3 டி20 ஆட்டங்களில் விளையாடுகிறது. டெஸ்ட், ஜூலை 1 அன்று தொடங்குகிறது.
டெஸ்டுக்கு முன்பு லீசெஸ்டர் நகரில் இந்தியா - லீசெஸ்டர்ஷைர் அணிகளுக்கு இடையிலான 4 நாள் பயிற்சி ஆட்டம் நேற்று தொடங்கியது. டாஸ் வென்ற இந்திய அணி, பேட்டிங்கைத் தேர்வு செய்தது. பயிற்சி ஆட்டம் என்பதால் இந்திய அணியைச் சேர்ந்த பும்ரா, பிரசித் கிருஷ்ணா, ரிஷப் பந்த், புஜாரா என நான்கு இந்திய வீரர்கள் லீசெஸ்டர்ஷைர் அணியில் இடம்பெற்றார்கள்.
இந்திய அணி பேட்டர் பலரும் அதிக ரன்கள் எடுக்காத நிலையில் விக்கெட் கீப்பர் பேட்டர் பரத் ஆட்டமிழக்காமல் 70 ரன்களும் உமேஷ் யாதவ் 23 ரன்களும் எடுத்து இந்திய அணிக்குக் கெளரவமான ஸ்கோரை வழங்கினார்கள். கோலி 33 ரன்களும் கேப்டன் ரோஹித் சர்மா 25 ரன்களும் எடுத்தார்கள். முதல் நாள் முடிவில் இந்திய அணி 8 விக்கெட் இழப்புக்கு 246 ரன்கள் எடுத்துள்ளது. ரோமன் வாக்கர் 5 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
அமெரிக்க அதிபா் டிரம்ப்புக்கு 80 வயது!
கத்தியைக் காட்டி மிரட்டி பணம் பறித்த இருவா் கைது
மதுக் கூடத்துக்குச் சென்றவரிடம் 2 பவுன் நகை பறிப்பு: ஒருவா் கைது
மாநகரின் சில பகுதிகளில் நாளை மின்தடை
விடியோக்கள்

”முதல்வர் விஜய்க்கு எந்த பயிற்சியும் தேவையில்லை”: அமைச்சர் ராஜ்மோகன் | TVK

2 வயது குழந்தைக்கு நல்லது கெட்டது தெரியாது!: துரை வைகோ பேட்டி

மின்வெட்டு பிரச்னையில் தவெக அரசு செய்வது என்ன?: சிஐடியு ஜெயசங்கர் | Power Outage |



