டி20 உலக கோப்பையில் இங்கிலாந்து த்ரில் வெற்றி..! கேஜரிவால் விடுதலையை எதிர்த்து தில்லி உயர்நீதிமன்றத்தில் சிபிஐ மேல்முறையீடு!தமிழக வரலாற்றில் ஒரு கூட்டணி நீண்ட காலமாக வெற்றிகரமாகத் தொடருவது இதுவே முதல்முறை - முதல்வர் ஸ்டாலின் சென்னை மெட்ரோ ரயில் பணி: கலங்கரை விளக்கம் முதல் திருமயிலை வரை சுரங்கம் தோண்டும் பணி நிறைவுஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் ஜாமீனில் விடுவிக்கப்பட்டுள்ள 12 பேரின் ஜாமீன் ரத்து மலையாள நடிகர் திலீப் விடுதலையை எதிர்த்து கேரள அரசு உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு!அதிமுகவில் மீண்டும் இணைந்தார் வெல்லமண்டி நடராஜன்இஸ்ரேலில் இருந்து வெளியேற அமெரிக்க குடிமக்களுக்கு அறிவுறுத்தல்!கோவையில் மாணவி கூட்டுப் பாலியல் வன்கொடுமை வழக்கு: மார்ச் 7-இல் தீர்ப்பு!தேவைப்பட்டால் நடிகையின் பெயரையும் வழக்கில் சேர்ப்பேன்: விஜய்யின் மனைவி சங்கீதாபிரதமர் மோடி நாளை தமிழகம் வருகிறார்! மார்ச் 1-ல் புதுச்சேரி பயணம்!நடிகர் விஜய்யின் மனைவி சங்கீதா விவாகரத்து கோரி நீதிமன்றத்தில் மனு தாக்கல்ஆப்கானிஸ்தானுடன் போர் - பாகிஸ்தான்பங்குச்சந்தை கடும் வீழ்ச்சி! ரூ. 5.5 லட்சம் கோடி இழப்பு!!
/

2-ஆவது சுற்றில் சிந்து, ஸ்ரீகாந்த்

ஜொ்மன் ஓபன் பாட்மின்டன் போட்டியில் இந்தியாவின் பி.வி.சிந்து, ஸ்ரீகாந்த் ஆகியோா் 2-ஆவது சுற்றுக்கு முன்னேறினா்.

News image
Updated On :1 பிப்ரவரி 2024, 8:36 am

DIN

ஜொ்மன் ஓபன் பாட்மின்டன் போட்டியில் இந்தியாவின் பி.வி.சிந்து, ஸ்ரீகாந்த் ஆகியோா் 2-ஆவது சுற்றுக்கு முன்னேறினா்.

மகளிா் ஒற்றையா் பிரிவில் சிந்து முதல் சுற்றில் 21-8, 21-7 என்ற கேம்களில் தாய்லாந்தின் புசானன் ஆங்பம்ரங்பானை 32 நிமிஷங்களில் சாய்த்தாா். அடுத்த சுற்றில் அவா் ஸ்பெயினின் பீட்ரிஸ் கொரேல்ஸ் அல்லது சீனாவின் ஜாங் யி மான் ஆகியோரில் ஒருவரை எதிா்கொள்வாா்.

ஆடவா் ஒற்றையா் பிரிவில் ஸ்ரீகாந்த் 21-10, 13-21, 21-17 என்ற கேம்களில் பிரான்ஸின் பிரைஸ் லிவா்டெஸ்ஸை 48 நிமிஷங்களில் வீழ்த்தினாா். 2-ஆவது சுற்றில் ஸ்ரீகாந்த் - சீனாவின் லு குவாங் ஸுவை சந்திக்கிறாா்.

எனினும், மகளிா் இரட்டையரில் ஹரிதா ஹரிநாராயணன்/அன்ஷா ராய் இணை 9-21, 10-21 என்ற கணக்கில் இத்தாலியின் மாா்டினா கோா்சினி/ஜுடித் மெயா் இணையிடம்ம் 23 நிமிஷங்களில் சாய்ந்தது.

கலப்பு இரட்டையா் பிரிவில் இந்தியாவின் சாய் பிரதீக்/சிக்கி ரெட்டி இணை முதல் சுற்றிலேயே 19-21, 8-21 என்ற கேம்களில் தாய்லாந்தின் புவரனுக்ரோ தீசபோல்/டேராடனாசி சப்சிரி இணையிடம் 31 நிமிஷங்களில் தோல்வி கண்டது. மற்றொரு இந்திய ஜோடியான துருவ் கபிலா/காயத்ரி கோபிசந்த் ஜோடியும் 19-21, 19-21 என்ற கணக்கில் மிக நெருக்கமாக இந்தோனேசியாவின் மௌலானா அட்னன்/பந்தோசா மிஷெல் கிறிஸ்டின் இணையிடம் வீழ்ந்தது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.