எண்ணெய்க் கப்பல்களுக்குப் பாதுகாப்பு அளிக்க நாங்கள் தயார்நிலையில் இல்லை! - அமெரிக்கா!அமெரிக்கா மீதான தாக்குதல் தொடரும்! மொஜ்தபா கமேனி முதல் உரையில் எச்சரிக்கை!ஈரான் போர்: சொந்த நாட்டினுள் இடம்பெயர்ந்த 32 லட்சம் மக்கள்!பங்குச்சந்தை: ஆட்டோ பங்குகள் கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 829, நிஃப்டி 228 புள்ளிகள் சரிவு!ஓபிசி பிரிவினருக்கான கிரீமி லேயர் தகுதி: உச்ச நீதிமன்றத் தீர்ப்புக்கு முதல்வர் ஸ்டாலின் ஆதரவு!சட்டம்-ஒழுங்கு சீர்கேடு: திமுக அரசைக் கண்டித்து தே.ஜ.கூ. ஆர்ப்பாட்டம்!தமிழ்நாட்டில் கடந்த 5 ஆண்டில் கொலை, பாலியல் குற்றங்கள் குறைந்துள்ளன: உள்துறை செயலர்வளைகுடா போர்! அமெரிக்க எண்ணெய்க் கப்பல் மீதான தாக்குதலில் இந்தியர் கொலை!
/

பகலிரவு டெஸ்ட்: இலங்கை அணி திணறல்

இந்தியாவுக்கு எதிரான 2ஆவது டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்சில் இலங்கை அணி 86 ரன்களுக்கு 6 விக்கெட்டுகளை இழந்து திணறி வருகிறது.

News image
Updated On :12 மார்ச் 2022, 4:52 pm

DIN

இந்தியாவுக்கு எதிரான 2ஆவது டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்சில் இலங்கை அணி 86 ரன்களுக்கு 6 விக்கெட்டுகளை இழந்து திணறி வருகிறது.

இந்தியா-இலங்கை அணிகளுக்கு இடையேயான 2ஆவது டெஸ்ட் போட்டி பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் இன்று தொடங்கியது. இதில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. தொடக்க ஆட்டக்காரர்களாக மயங்க் அகர்வால், ரோஹித் சர்மா களமிறங்கினர். ஆனால் மயங்க் அகர்வால் 4 ரன்களில் ஆட்டமிழந்து ஏமாற்றம் அளித்தார். இவரைத் தொடர்ந்து மற்றொரு தொடக்க ஆட்டக்காரர் ரோஹித் சர்மாவும் 15 ரன்களில் வெளியேறினார்.

அடுத்து வந்த விஹாரி சிறிதுநேரம் நிலைத்து ஆடினார். அவர், 31 ரன்களில் ஜெயவிக்ரமா பந்தில் ஆட்டமிழந்தார். இதைத்தொடர்ந்து களம்கண்ட கோலி 23, பந்த் 39 ரன்கள் என அடுத்தடுத்து விக்கெட்டுகளை பறிகொடுத்தனர். சிறப்பாக விளையாடிய ஷ்ரேயஸ் ஐயர் அரைசதம் கடந்த அசத்தினார். இருப்பினும் அவர் 98 பந்துகளில் 92 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார். இறுதியில் இந்திய அணி தனது முதல் இன்னிங்சில் 59.1 ஓவர்களில் 252 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.

டெஸ்டின் முதல் நாள், முதல் பகுதியிலேயே ஆடுகளம், சுழற்பந்துவீச்சுக்குச் சாதகமாக மாறியதால் ரன்கள் எடுப்பதும் விக்கெட்டை இழக்காமல் இருப்பதும் பேட்டர்களுக்குச் சவாலாக இருந்தன. இலங்கை தரப்பில் எம்புல்டெனியா, ஜெயவிக்ரமா தலா 3 விக்கெட்டுகளும் தனஞ்செய டிசில்வா 2 விக்கெட்டுகளும் எடுத்தனர். பின்னர் களமிறங்கிய இலங்கை அணி, இந்திய அணியின் பந்வீச்சுக்கு முன் தாக்குப்பிடிக்க முடியவில்லை. இதனால், முதல்நாள் ஆட்ட நேர முடிவில் 30 ஓவர்களில் 86 ரன்களுக்கு 6 விக்கெட்டுகளை இழந்து இலங்கை அணி திணறி வருகிறது.

இந்திய அணி தரப்பில் பும்ரா 3, முகமது ஷமி 2, அக்சர் படேல் ஒரு விக்கெட் வீழ்த்தினர். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.