பகலிரவு டெஸ்ட்: இந்திய அணி 252 ரன்களில் ஆல் அவுட்
இலங்கைக்கு எதிரான 2ஆவது டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்சில் இந்திய அணி 252 ரன்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.


இலங்கைக்கு எதிரான 2ஆவது டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்சில் இந்திய அணி 252 ரன்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.
இந்தியா-இலங்கை அணிகளுக்கு இடையேயான 2ஆவது டெஸ்ட் போட்டி பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் இன்று தொடங்கியது. இதில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. தொடக்க ஆட்டக்காரர்களாக மயங்க் அகர்வால், ரோஹித் சர்மா களமிறங்கினர். ஆனால் மயங்க் அகர்வால் 4 ரன்களில் ஆட்டமிழந்து ஏமாற்றம் அளித்தார். இவரைத் தொடர்ந்து மற்றொரு தொடக்க ஆட்டக்காரர் ரோஹித் சர்மாவும் 15 ரன்களில் வெளியேறினார்.
அடுத்து வந்த விஹாரி சிறிதுநேரம் நிலைத்து ஆடினார். அவர், 31 ரன்களில் ஜெயவிக்ரமா பந்தில் ஆட்டமிழந்தார். இதைத்தொடர்ந்து களம்கண்ட கோலி 23, பந்த் 39 ரன்கள் என அடுத்தடுத்து விக்கெட்டுகளை பறிகொடுத்தனர். சிறப்பாக விளையாடிய ஷ்ரேயஸ் ஐயர் அரைசதம் கடந்த அசத்தினார். இருப்பினும் அவர் 98 பந்துகளில் 92 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார். இறுதியில் இந்திய அணி தனது முதல் இன்னிங்சில் 59.1 ஓவர்களில் 252 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.
டெஸ்டின் முதல் நாள், முதல் பகுதியிலேயே ஆடுகளம், சுழற்பந்துவீச்சுக்குச் சாதகமாக மாறியதால் ரன்கள் எடுப்பதும் விக்கெட்டை இழக்காமல் இருப்பதும் பேட்டர்களுக்குச் சவாலாக இருந்தன. இலங்கை தரப்பில் எம்புல்டெனியா, ஜெயவிக்ரமா தலா 3 விக்கெட்டுகளும் தனஞ்செய டிசில்வா 2 விக்கெட்டுகளும் எடுத்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...