6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

6 நாள்களில் சிஎஸ்கேவுடன் மோதல்: என்ன சொல்கிறார் கேகேஆர் புதிய கேப்டன்?

எந்தவொரு நிலையிலும் பேட்டிங் செய்யத் தயாராக இருப்பதாக கொல்கத்தா நைட் ரைடர்ஸ் கேப்டன் ஷ்ரேயஸ் ஐயர் தெரிவித்துள்ளார்.

News image
கோப்புப்படம்
Updated On :20 மார்ச் 2022, 8:07 am

DIN


எந்தவொரு நிலையிலும் பேட்டிங் செய்யத் தயாராக இருப்பதாக கொல்கத்தா நைட் ரைடர்ஸ் கேப்டன் ஷ்ரேயஸ் ஐயர் தெரிவித்துள்ளார்.

ஐபிஎல் மெகா ஏலத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியால் ரூ. 12.25 கோடிக்குத் தேர்வு செய்யப்பட்டார் ஷ்ரேயஸ் ஐயர். அவரே கொல்கத்தா அணியின் புதிய கேப்டனாக நியமிக்கப்பட்டார்.

அணி நிர்வாகம் வெளியிட்ட விடியோவில் ஷ்ரேயஸ் பேசியதாவது:

"விக்கெட் விழாதவாறு பாட்னர்ஷிப்புக்கு ஒத்துழைப்பு தந்து விளையாடுபவராக நினைத்துக்கொள்ள முடியாது. சூழலுக்கு ஏற்ப நான் அதிரடி ஆட்டக்காரராக இருக்கலாம், மற்றொரு வீரர் விக்கெட் விழாதவாறு பார்த்துக்கொண்டு விளையாடலாம். நிலைமைக்கு ஏற்ப சூழலும் பொறுப்பும் வேறுபடும். விக்கெட் விழாதவாறு பார்த்துக்கொண்டு விளையாட ஒரு வீரரை மட்டுமே நம்ப முடியாது.

அணியிலுள்ள அனைத்து வீரர்களும் பொறுப்பேற்றுக்கொண்டு, மற்ற வீரர்களை சார்ந்து இல்லாமல் அணிக்கு வெற்றியைத் தேடித் தர வேண்டும். தனிப்பட்ட முறையில் எனக்கு 3-வது நிலை வீரராகக் களமிறங்குவது பிடிக்கும். நீண்ட நாள்களாக அந்த நிலையில் விளையாடி வருகிறேன். ஆனால், அணி என்னை எங்கு களமிறங்க வேண்டும் என நினைக்கிறதோ அதற்கேற்ப நான் மாறிக்கொள்வேன். 

கொல்கத்தா அணி எப்போதுமே ஆக்ரோஷமான பயத்தைக் காட்டிராத அணியாகத்தான் இருந்துள்ளது. முதல் பந்திலிருந்து அடித்து விளையாடி எதிரணியை பின்னடைவைச் சந்திக்கச் செய்யும். அதற்கான மனநிலை இருக்க வேண்டும். எப்போது பேட்டிங் செய்ய களமிறங்கினாலும், அதே மனநிலையில்தான் நான் செல்வேன். கேப்டனாக வழிநடத்தும்போது அணி வீரர்களிடமிருந்தும் அதைத்தான் நான் விரும்புவேன். 

எது செய்தாலும், அதை அணிக்காக செய்ய வேண்டும். நம்மை முன்னிலைப்படுத்தக் கூடாது. ஒரு கேப்டனாக அந்த மனநிலையில் கவனம் செலுத்தவே நான் விரும்புகிறேன்" என்றார் அவர்.

ஐபிஎல் முதல் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் வரும் 26-ம் தேதி விளையாடுகின்றன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.