புதுச்சேரியில் தேமுதிக தனித்துப் போட்டி! புதுச்சேரியில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தனித்துப் போட்டி!காலையிலேயே ‘காளை’ ஆதிக்கம்! சென்செக்ஸ் 1,100 புள்ளிகள் உயர்வு!!92,000 டன் எல்பிஜியுடன் இந்தியாவுக்கு மேலும் இரு கப்பல்கள்!பொதுத்துறை வங்கிகளை இணைக்கும் திட்டம் இல்லை: மத்திய அரசுராணுவ மோதல்களில் வான்வழித் தாக்குதல்களுக்குத் தடை: போப் வலியுறுத்தல்தோ்தல் விதிமீறல்: 462 வழக்குகள்; ரூ.151 கோடி பணம், பொருள்கள் பறிமுதல்தமிழ்நாட்டில் மேல்நிலைப் பள்ளிகளில் மாணவா்கள் சோ்க்கை சதவீதம் உயா்வு!
/

மே.இ. தீவுகளை எளிதாக வீழ்த்தி உலகக் கோப்பை இறுதிச்சுற்றுக்கு முன்னேறிய ஆஸ்திரேலிய மகளிர் அணி

மேற்கிந்தியத் தீவுகள் அணியை 157 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி மகளிர் உலகக் கோப்பை இறுதிச்சுற்றுக்குத் தகுதி பெற்றுள்ளது ஆஸ்திரேலிய அணி. 

News image
Updated On :30 மார்ச் 2022, 6:22 am

DIN

மேற்கிந்தியத் தீவுகள் அணியை 157 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி மகளிர் உலகக் கோப்பை இறுதிச்சுற்றுக்குத் தகுதி பெற்றுள்ளது ஆஸ்திரேலிய அணி. 

வெலிங்டனில் நடைபெற்ற முதல் அரையிறுதிச் சுற்றில் ஆஸ்திரேலியா - மேற்கிந்தியத் தீவுகள் அணிகள் மோதி வருகின்றன. முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலிய அணி 45 ஓவர்களில் 3 விக்கெட் இழப்புக்கு 305 ரன்கள் குவித்தது. மழை காரணமாக ஆட்டம் 45 ஓவர்களாகக் குறைக்கப்பட்டது. ஆஸி. தொடக்க வீராங்கனைகள் ரேச்சர் ஹெய்ன்ஸும் அலிஸா ஹீலியும் முதல் விக்கெட்டுக்கு 32.4 ஓவர்களில் 216 ரன்கள் குவித்தார்கள். அலிஸா ஹீலி 107 பந்துகளில் 1 சிக்ஸர், 17 பவுண்டரிகளுடன் 129 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். இது அவருடைய 4-வது ஒருநாள் சதமாகும். 

ஆஸி. அணி நிர்ணயித்த இலக்கை விரட்ட மே.இ. தீவுகள் அணி மிகவும் தடுமாறியது. 37 ஓவர்களில் 148 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. கேப்டன் ஸ்டஃபானி டெய்லர் 48 ரன்களும் டாட்டின் 34 ரன்களும் எடுத்தார்கள். 

மே.இ. தீவுகள் அணியை 157 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி இறுதிச்சுற்றுக்கு முன்னேறியுள்ளது ஆஸ்திரேலிய அணி. உலகக் கோப்பைப் போட்டியில் ஆஸ்திரேலிய அணி 7-வது முறையாக இறுதிச்சுற்றுக்குத் தகுதி பெற்றுள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.