இந்திய இளம் வீராங்கனை ஷெஃபாலி வர்மா
இந்திய இளம் வீராங்கனை ஷெஃபாலி வர்மா

அறிமுகமாகும் மகளிர் யு-19 டி20 உலகக் கோப்பை: ஐசிசி அறிவிப்பு

மகளிர் பிரிவிலும் யு-19 உலகக் கோப்பைப் போட்டியை அறிமுகப்படுத்தவுள்ளது ஐசிசி.
Published on

ஆடவர் யு-19 உலகக் கோப்பைப் போட்டிகளைப் போல மகளிர் பிரிவிலும் யு-19 உலகக் கோப்பைப் போட்டியை அறிமுகப்படுத்தவுள்ளது ஐசிசி.

இதுகுறித்த அறிவிப்பை ஐசிசி தலைமைச் செயல் அதிகாரி ஜெஃப் ஆலர்டைஸ் இன்று வெளியிட்டுள்ளார். மகளிர் கிரிக்கெட்டில் இதுவரை 19 வயதுக்குட்பட்ட உலகக் கோப்பைப் போட்டிகள் நடத்தப்பட்டதில்லை. முதல்முதலில் யு-19 உலகக் கோப்பைப் போட்டியை டி20 கிரிக்கெட் வடிவத்தில் நடத்த ஐசிசி முன்வந்திருப்பதால் பல புதிய திறமைகளைக் கண்டெடுக்க இப்போட்டி உதவும் என அறியப்படுகிறது. 

2023 மகளிர் டி20 உலகக் கோப்பைப் போட்டிக்கு முன்பு, யு-19 டி20 உலகக் கோப்பை நடைபெறவுள்ளது. எங்கு நடைபெறும் என்பது இன்னும் முடிவாகவில்லை. ஐசிசி கூட்டத்தில் இதுபற்றி இன்னும் ஒரு வாரத்தில் முடிவு செய்யப்படும் என ஆலர்டைஸ் அறிவித்துள்ளார். மேலும் மகளிர் கிரிக்கெட்டில் 2024 முதல் 2027 வரையிலான போட்டிகளை யார் நடத்துவது என்பது குறித்து ஜூலை மாதம் முடிவு செய்யப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

X
Dinamani
www.dinamani.com