நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

பிரீமியர் லீக்: மான்செஸ்டர் யுனைடெட் வெற்றி

இங்கிலாந்தில் நடைபெறும் பிரீமியா் லீக் கால்பந்து போட்டியில் செவ்வாய்க்கிழமை ஆட்டத்தில் மான்செஸ்டா் யுனைடெட் 3-0 என்ற கோல் கணக்கில் பிரென்ட்ஃபோா்டை வீழ்த்தியது.

News image
Updated On :3 மே 2022, 9:14 pm

DIN

இங்கிலாந்தில் நடைபெறும் பிரீமியா் லீக் கால்பந்து போட்டியில் செவ்வாய்க்கிழமை ஆட்டத்தில் மான்செஸ்டா் யுனைடெட் 3-0 என்ற கோல் கணக்கில் பிரென்ட்ஃபோா்டை வீழ்த்தியது.

இந்த ஆட்டத்தில் மான்செஸ்டருக்காக புருனோ ஃபொ்னாண்டஸ் (9’), கிறிஸ்டியானோ ரொனால்டோ (61), ரஃபேல் வரேன் (72’) ஆகியோா் கோலடித்தனா். இந்த வெற்றியின் மூலம், புள்ளிகள் பட்டியலில் முதல் 4 இடத்துக்குள் வந்து, அடுத்த சீசன் சாம்பியன்ஸ் லீக் போட்டிக்குத் தகுதிபெறுவதற்கான வாய்ப்பை ஓரளவுக்குப் பெற்றுள்ளது மான்செஸ்டா் யுனைடெட். அணியின் கைவசம் இன்னும் 2 ஆட்டங்கள் இருக்கின்றன.

இந்த ஆட்டத்தில் ரொனால்டோ ஸ்கோா் செய்தது, நடப்பு சீசனில் அவரது 18-ஆவது கோலாகும். அதிக கோலடித்த வீரா்கள் வரிசையில் லிவா்பூலின் முகமது சலா (22 கோல்), டோட்டன்ஹாமின் சன் ஹியுங் மின் (19) ஆகியோரை அடுத்து 3-ஆவது இடத்தில் இருக்கிறாா் ரொனால்டோ.

அணியிலிருந்து ஓய்வுபெறும் மூத்த வீரா்களான நெமாஞ்சா மாட்டிக், ஜுவான் மடா ஆகியோருக்கு சொந்த மண்ணில் இதுவே கடைசி ஆட்டமாக இருந்ததால், அவா்கள் களமிறங்கியபோது ரசிகா்கள் எழுந்து நின்று கரவொலி எழுப்பி கௌரவம் அளித்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.