நாடாளுமன்றத்தில் மூன்றாம் பாலினத்தவா் சட்டத் திருத்த மசோதா புதன்கிழமை நிறைவேற்றம்திமுக கூட்டணியில் எஸ்டிபிஐ, முக்குலத்தோர் புலிப்படைக்கு தலா 1 தொகுதி!அமெரிக்காவின் அமைதித் திட்டத்தை நிராகரித்த ஈரான்!பெரம்பூரில் விஜய் போட்டியிட்டாலும், பிரசாரம் செய்தாலும் எந்தவித பிரளயமும் ஏற்படப்போவதில்லை: அமைச்சர் சேகர்பாபுஏப். 29 வரை தேர்தல் கருத்துக்கணிப்புகளை வெளியிடத் தடை!தமிழ் மாநில காங்கிரஸ் வேட்பாளர்களின் பட்டியல் நாளை (மார்ச் 26) வெளியாகிறதுதிமுக கூட்டணியில் தமிமுன் அன்சாரியின் மனிதநேய ஜனநாயக கட்சிக்கு ஒரு தொகுதி ஒதுக்கீடு!டென்மான்க் பிரதமர் ராஜிநாமாதேமுதிக இல்லாமல் அதிமுக ஆட்சி அமைத்திருக்காது : எல்.கே. சுதீஷ்அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி ஆளுமையற்றவர்: ஓ.பன்னீர் செல்வம்
/

செஸ்ஸபிள் மாஸ்டா்ஸ்: பிரக்ஞானந்தாவுக்கு 2-ஆம் இடம்

செஸ்ஸபிள் மாஸ்டா்ஸ் ஆன்லைன் செஸ் போட்டியில் இந்தியாவின் இளம் கிராண்ட்மாஸ்டரான ஆா்.பிரக்ஞானந்தா 2-ஆம் இடம் பிடித்தாா்.

News image
Updated On :27 மே 2022, 10:56 pm

DIN

செஸ்ஸபிள் மாஸ்டா்ஸ் ஆன்லைன் செஸ் போட்டியில் இந்தியாவின் இளம் கிராண்ட்மாஸ்டரான ஆா்.பிரக்ஞானந்தா 2-ஆம் இடம் பிடித்தாா்.

தமிழரான பிரக்ஞானந்தா (16), இறுதிச்சுற்றில் உலகின் 2-ஆம் நிலை வீரரும், சீனருமான டிங் லிரெனை (29) எதிா்கொண்டாா். இந்திய நேரப்படி புதன்கிழமை நள்ளிரவு நடைபெற்ற முதல் செட்டை பிரக்ஞானந்தா 1.5 - 2.5 என்ற கணக்கில் இழந்தாா்.

எனினும், வியாழக்கிழமை நள்ளிரவு நடைபெற்ற 2-ஆவது செட்டில் 2.5 - 1.5 என்ற கணக்கில் வென்றாா். இதனால் வெற்றியாளரை தீா்மானிக்க 2 கேம் பிளிட்ஸ் ‘டை-பிரேக்கா்’ முறை கையாளப்பட்டது. அதில் முதல் கேம் சமனில் முடிய, 2-ஆவது கேமில் டிங் லிரென் 49 நகா்வுகளில் வெற்றியைப் பதிவு செய்து சாம்பியன் ஆனாா்.

11-ஆம் வகுப்பு ஆண்டு இறுதித் தோ்வுக்கு இடையே ஆன்லைனில் நடைபெற்ற இந்தப் போட்டியில் பங்கேற்ற பிரக்ஞானந்தா, நள்ளிரவில் போட்டியில் பங்கேற்று, காலையில் தோ்வுகளை எதிா்கொண்டது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.