டி20 உலகக் கோப்பை: இலங்கைக்கு எதிராக 144 ரன்கள் எடுத்த ஆப்கானிஸ்தான்!
இலங்கைக்கு எதிரான டி20 உலகக் கோப்பை ஆட்டத்தில் ஆப்கானிஸ்தான் அணி 20 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 144 ரன்கள் எடுத்துள்ளது.


இலங்கைக்கு எதிரான டி20 உலகக் கோப்பை ஆட்டத்தில் ஆப்கானிஸ்தான் அணி 20 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 144 ரன்கள் எடுத்துள்ளது.
பிரிஸ்பேனில் நடைபெறும் ஆட்டத்தில் டாஸ் வென்ற ஆப்கானிஸ்தான் அணி பேட்டிங்கைத் தேர்வு செய்தது. முதல் மூன்று பேட்டர்கள் குறைந்தது 20 ரன்கள் எடுத்தார்கள். எனினும் எந்த பேட்டராலும் 30 ரன்களைத் தொட முடியாமல் ஆட்டமிழந்தார்கள். தொடக்க வீரர் குர்பாஸ் அதிகபட்சமாக 28 ரன்கள் எடுத்தார். ஆப்கானிஸ்தான் அணி 20 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 144 ரன்கள் எடுத்துள்ளது. ஹசரங்கா 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
குரூப் 1 பிரிவில் இலங்கை, ஆப்கானிஸ்தான் அணிகள் 2 புள்ளிகளுடன் கடைசி இரு இடங்களில் உள்ளன. இந்த ஆட்டத்தில் தோற்கும் அணியால் அரையிறுதிக்கு நுழைய முடியாது என்பதால் இரு அணிகளும் வெற்றிக்காகக் கடுமையாகப் போராடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...