ஜிம்பாப்வே அணிக்கு எதிரான டி20 உலகக் கோப்பை ஆட்டத்தை 5 விக்கெட் வித்தியாசத்தில் வென்றுள்ளது நெதர்லாந்து.
அடிலெய்டில் நடைபெற்ற ஆட்டத்தில் டாஸ் வென்ற ஜிம்பாப்வே பேட்டிங்கைத் தேர்வு செய்தது. ஜிம்பாப்வேவுக்கு பவர்பிளே மோசமாக அமைந்தது. 6 ஓவர்களின் முடிவில் 3 விக்கெட் இழப்புக்கு 20 ரன்கள் மட்டுமே எடுத்திருந்தது. இதன்பிறகு சிகந்தர் ராஸாவும் ஷான் வில்லியம்ஸும் பொறுப்புடன் விளையாடினார்கள். 12-வது ஓவரில் 28 ரன்களுக்கு ஆட்டமிழந்தார் வில்லியம்ஸ். இன்றும் சிறப்பாக விளையாடிய சிகந்தர் ராஸா 24 பந்துகளில் 3 சிக்ஸர்கள், 3 பவுண்டரிகளுடன் 40 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். ஜிம்பாப்வே அணி 19.2 ஓவர்களில் 117 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. இரு பேட்டர்களைத் தவிர மற்ற அனைவரும் ஒற்றை இலக்க ரன்களுக்கு ஆட்டமிழந்தார்கள். பால் வான் மீகரன் 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
சிறப்பாகப் பந்துவீசிய நெதர்லாந்து பேட்டிங்கிலும் திறமையை வெளிப்படுத்தியது. மேக்ஸ் ஓ தவுத் 52 ரன்களும் டாம் கூப்பர் 32 ரன்களும் எடுத்து வெற்றிக்குப் பெரிதும் உதவினார்கள். 18 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 120 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது நெதர்லாந்து.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

பெங்களூரில் கனமழை! தண்ணீரில் மூழ்கிய வாகனங்கள்!

நீலகிரி உள்பட 10 மாவட்டங்களில் இன்று கனமழை!
ஓய்வறையில் இ-சிகரெட் பிடித்த விவகாரம்! ரியான் பராக்கிற்கு அபராதம்!

"இந்தியா வியக்கும் Miracle" செங்கோட்டையன் நம்பிக்கை! | TVK
வீடியோக்கள்
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு

த்ரிஷ்யம் 3 டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

எல்லா டீமும் ஏன் தப்பு தப்பா விளையாடுறாங்க..?
தினமணி செய்திச் சேவை

பில்லா ரீ-ரிலீஸ் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு


