யூடியூபிலும் பிரதமா் மோடி புதிய சாதனை! 3 கோடி போ் பின்தொடரும் ஒரே அரசியல் தலைவா்பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வு: தோ்வுக்கூட அனுமதிச் சீட்டு இன்று வெளியீடுஇந்தியாவிடம் போதிய அளவு கச்சா எண்ணெய் கையிருப்பு: மத்திய அமைச்சா் ஹா்தீப் சிங் புரிஇன்று முதல் அரையிறுதி ஆட்டம் - தென்னாப்பிரிக்காவுடன் மோதும் நியூஸிலாந்துமேற்காசியாவிலிருந்து இந்தியா்களை மீட்க இன்று 58 விமானங்கள் இயக்கம்: மத்திய அரசு நாளை வேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் சோதனை ஓட்டம்
/

டி20 உலகக் கோப்பை: பயிற்சியின்போது ரோஹித் சர்மாவுக்கு என்ன ஆனது?

பேட்டிங் பயிற்சியில் ஈடுபட்டிருந்தபோது இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மாவுக்குக் கையில் காயம் ஏற்பட்டது.

News image
Updated On :8 நவம்பர் 2022, 7:03 am

DIN

டி20 உலகக் கோப்பைப் போட்டியில் குரூப் 2 பிரிவில் முதல் இடம் பிடித்து அரையிறுதிக்குத் தகுதியடைந்துள்ளது இந்திய அணி.

அரையிறுதிக்கு இந்தியா, நியூசிலாந்து, இங்கிலாந்து, பாகிஸ்தான் ஆகிய 4 அணிகள் தகுதி பெற்றுள்ளன. புதன் அன்று சிட்னியில் நடைபெறும் முதல் அரையிறுதியில் நியூசிலாந்து - பாகிஸ்தான் அணிகள் மோதவுள்ளன. வியாழன் அன்று அடிலெய்டில் நடைபெறவுள்ள 2-வது அரையிறுதியில் இந்தியா - இங்கிலாந்து அணிகள் மோதவுள்ளன.

இந்நிலையில் அடிலெய்டில் பேட்டிங் பயிற்சியில் ஈடுபட்டிருந்தபோது இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மாவுக்குக் கையில் காயம் ஏற்பட்டது. இதையடுத்து பயிற்சியில் இருந்து விடுபட்டு சிகிச்சை எடுத்துக் கொண்டார். பிறகு மீண்டும் பயிற்சியில் இணைந்து கொண்டார். ரோஹித் சர்மாவுக்குக் காயம் ஏற்பட்டதால் இந்திய ரசிகர்களிடையே பரபரப்பு ஏற்பட்டது. இந்தக் காயத்தால் அரையிறுதியில் ரோஹித் சர்மாவால் விளையாட முடியுமா எனப் பலரும் சமூகவலைத்தளங்களில் கேள்வி எழுப்பினார்கள். ஆனால் காயம் பெரிதளவில் பாதிக்காததால் மீண்டும் பயிற்சிக்குத் திரும்பியுள்ளார்  ரோஹித் சர்மா. இதனால் அரையிறுதியில் அவர் விளையாடுவதில் எவ்வித சிரமும் இருக்காது என அறியப்படுகிறது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.