பெங்களூரு அபார வெற்றி..! இறுதி ஆட்டத்துக்கு முன்னேறியதுதிருச்சி கிழக்கு உள்பட தாராபுரம், மதுராந்தகம், பெருந்துறை, அம்பாசமுத்திரம் என 5 தொகுதிகள் காலியானதாக அறிவிப்பு!உசிலம்பட்டி: மின்னல் தாக்கி 3 கூலித் தொழிலாளிகள் பலிதொகுதி நலனுக்காக அதிமுகவில் இருந்து விலகி தவெகவில் இணைந்தேன் : இசக்கி சுப்பையா விளக்கம் அதிமுக எம்.எல்.ஏ.க்களால் தவெக நம்பகத்தன்மை கெடும்: திருமாவளவன் ஜூன் 4-இல் பள்ளிகள் திறப்பு!ஆம்! +2 இயற்பியல் விடைத்தாள் மாறிவிட்டது: ஒப்புக்கொண்ட சிபிஎஸ்இ; பெற்றோர் கவலைதமிழ்நாட்டிற்கு புதிய டிஜிபி: 3 பேர் கொண்ட பட்டியலுக்கு யுபிஎஸ்சி ஒப்புதல்!9-ம் வகுப்புக்கு மும்மொழி: சிபிஎஸ்இ அறிவிப்புக்கு அண்ணாமலை எதிர்ப்பு!
/

டெஸ்ட், ஒருநாள் தொடர்கள்: ஆஸி. அணி அறிவிப்பு

டி20 உலகக் கோப்பைப் போட்டிக்குப் பிறகு ஆஸ்திரேலியாவில் இங்கிலாந்துக்கு எதிரான 3 ஒருநாள் ஆட்டங்களில்...

News image
Updated On :8 நவம்பர் 2022, 11:07 am IST

இங்கிலாந்துக்கு எதிரான ஒருநாள் தொடரில் மற்றும் மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் விளையாடவுள்ள ஆஸ்திரேலிய அணி அறிவிக்கப்பட்டுள்ளது. 

ஆஸ்திரேலியாவில் நடைபெறும் டி20 உலகக் கோப்பைப் போட்டியில் சொந்த மண்ணில் அரையிறுதிக்கு நுழையும் வாய்ப்பை இழந்து வெளியேறியுள்ளது ஆஸ்திரேலிய அணி. நடப்பு சாம்பியனாக இருந்தும் 5 ஆட்டங்களில் 3-ல் வெற்றி பெற்று 3-ம் இடம் பிடித்ததால் அரையிறுதிக்குத் தகுதி பெறும் வாய்ப்பை இழந்தது. 

டி20 உலகக் கோப்பைப் போட்டிக்குப் பிறகு ஆஸ்திரேலியாவில் இங்கிலாந்துக்கு எதிரான 3 ஒருநாள் ஆட்டங்களில் ஆஸ்திரேலிய அணி விளையாடவுள்ளது. இத்தொடர் நவம்பர் 17-ல் ஆரம்பித்து நவம்பர் 22-ல் முடிவடைகிறது. அடுத்ததாக, ஆஸ்திரேலியாவில் மே.இ. தீவுகளுக்கு எதிரான 2 டெஸ்டுகள் கொண்ட தொடரிலும் ஆஸி. அணி விளையாடவுள்ளது. இரு டெஸ்டுகளும் நவம்பர் 30, டிசம்பர் 8 ஆகிய தேதிகளில் தொடங்கவுள்ளன. 

இந்நிலையில் இரு தொடர்களுக்குமான ஆஸி. அணி இன்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இங்கிலாந்துக்கு எதிராக விளையாடவுள்ள ஆஸி. ஒருநாள் அணி

பேட் கம்மின்ஸ் (கேப்டன்), ஆஷ்டன் அகர், அலெக்ஸ் கேரி, கேம்ரூன் கிரீன், ஜோஷ் ஹேஸில்வுட், டிராவிஸ் ஹெட், மார்னஸ் லபுஷேன், மிட்செல் மார்ஷ், கிளென் மேக்ஸ்வெல், ஸ்டீவ் ஸ்மித், மிட்செல் ஸ்டார்க், மார்கஸ் ஸ்டாய்னிஸ், டேவிட் வார்னர், ஆடம் ஸாம்பா.

மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிராக விளையாடவுள்ள ஆஸி. டெஸ்ட் அணி

பேட் கம்மின்ஸ் (கேப்டன்), ஸ்காட் போலண்ட், அலெக்ஸ் கேரி, கேம்ரூன் கிரீன், மார்கஸ் ஹாரிஸ், ஜோஷ் ஹேஸில்வுட், டிராவிஸ் ஹெட், உஸ்மான் கவாஜா, மார்னஸ் லபுஷேன், நாதன் லயன், ஸ்டீவ் ஸ்மித், மிட்செல் ஸ்டார்க், டேவிட் வார்னர். 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.