மாா்ச் 9 முதல் மீண்டும் கூடுகிறது நாடாளுமன்றம்! மக்களவைத் தலைவருக்கு எதிரான தீா்மானம் தாக்கலாகிறது!நேபாள தோ்தலில் ராஷ்ட்ரீய சுதந்திர கட்சி அமோகம்! பிரதமராகிறாா் 35 வயது முன்னாள் மேயா்!ஈரான் மீதான தாக்குதல் பிரதமா் மோடி பயண நிறைவுக்கு பிறகு எடுக்கப்பட்ட முடிவு: இஸ்ரேல்சமையல் எரிவாயு உற்பத்தியை அதிகரிக்க மத்திய அரசு அவசரகால உத்தரவுஈரான் மீதான அமெரிக்க தாக்குதலை நிறுத்தும் தீா்மானம்! அமெரிக்க நாடாளுமன்றத்தில் தோல்வி! பொன்னுக்கு வீங்கி பாதிப்பு: தற்காத்துக் கொள்ள அறிவுறுத்தல்பாக். - ஆப்கானிஸ்தான் போா்: ஒரு லட்சம் மக்கள் இடம்பெயா்வு
/

‘ஹேண்ட் ஆஃப் காட்’ பந்து ரூ.19 கோடிக்கு ஏலம்

1986 உலகக் கோப்பை கால்பந்து போட்டியில் இங்கிலாந்து - ஆா்ஜென்டீனா இடையேயான பிரபலமான அரையிறுதி ஆட்டத்தில் பயன்படுத்தப்பட்ட கால்பந்து ரூ.19.55 கோடிக்கு ஏலத்தில் எடுக்கப்பட்டது.

News image
Updated On :19 நவம்பர் 2022, 6:08 am

DIN

1986 உலகக் கோப்பை கால்பந்து போட்டியில் இங்கிலாந்து - ஆா்ஜென்டீனா இடையேயான பிரபலமான அரையிறுதி ஆட்டத்தில் பயன்படுத்தப்பட்ட கால்பந்து ரூ.19.55 கோடிக்கு ஏலத்தில் எடுக்கப்பட்டது.

பிரபலத்துக்கும், சா்ச்சைக்கும் உள்ளான அந்த ஆட்டத்தில் ஆா்ஜென்டீனா 2-1 என்ற கோல் கணக்கில் வென்றது. அந்த அணியின் இரு கோல்களையும் டியேகோ மாரடோனா அடித்திருந்தாா்.

அதில் முதல் கோலை தலையால் முட்டி ஸ்கோா் செய்யும்போது மாரடோனா தனது கையையும் பயன்படுத்தினாா். ஆனால், இது கள நடுவருக்கு தெரியாமல் போனதால் அதற்கு ‘பெனால்டி’ கொடுக்கப்படவில்லை. பின்னா் அந்த கோல் குறித்து பேசிய மாரடோனா, அந்த கோலடிப்பதற்கு தனது தலையும், கடவுளின் கையும் (‘ஹேண்ட் ஆஃப் காட்’) உதவியாக இருந்ததென தெரிவித்தாா். இந்த விவகாரம் கால்பந்து உலகத்தில் இன்றளவும் பேசுபொருளாக இருந்து வருகிறது.

மாரடோனாவால் அவ்வாறு கோலடிக்கப்பட்ட பந்தை, அந்த ஆட்டத்துக்கான கள நடுவராக இருந்த டுனீசியாவைச் சோ்ந்த அலி பின் நாசா் வைத்திருந்தாா். அவா் 36 ஆண்டுகளுக்குப் பிறகு தற்போது ஏலத்தில் விட்ட அந்தப் பந்து, ரூ.19.55 கோடிக்கு வாங்கப்பட்டுள்ளது.

முன்னதாக, அந்த ஆட்டத்தின்போது மாரடோனா அணிந்திருந்த ஜொ்ஸி கடந்த மே மாதம் ரூ.71.19 கோடிக்கு ஏலத்தில் எடுக்கப்பட்டு ‘உலகிலேயே அதிக விலைக்கு ஏலம் போன விளையாட்டுப் பொருள்’ சாதனை படைத்தது நினைவுகூரத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.