லடாக் துணைநிலை ஆளுநர் பதவி விலகல்?தமிழ்நாடு ஆளுநராக அஜய்குமார் பல்லா?மத்திய கிழக்கில் பதற்றம்: சிபிஎஸ்இ தேர்வுகள் ரத்து!மேற்கு வங்க ஆளுநர் ராஜிநாமா! ஆர்.என். ரவி நியமனம்!இந்தியாவுக்கு எரிவாயு வழங்க ஆஸ்திரேலியா, கனடா முடிவு?தேர்தல் விதிமீறல்: ஓபிஎஸ் மீதான 4 வழக்குகள் ரத்து!ஈரானின் தலைவர் கமேனி கொலை! - இந்தியா இரங்கல்!ராணுவ மோதல் பிரச்னைக்குத் தீர்வு அல்ல: பிரதமர் மோடிஈரான் வெளியுறவு அமைச்சருடன் ஜெய்சங்கர் உரையாடல்!சென்செக்ஸ் 900 புள்ளிகள் உயர்வு! ஐடி பங்குகள் மட்டும் சரிவு!
/

2024 டி20 உலகக் கோப்பை: அணிகள் மோதும் விதம் மாற்றம்

டி20 உலகக் கோப்பை போட்டியின் 2024-ஆம் ஆண்டு போட்டியில் அணிகள் மோதும் விதம் மாற்றப்பட்டுள்ளது.

News image
Updated On :22 நவம்பர் 2022, 10:04 pm

DIN

டி20 உலகக் கோப்பை போட்டியின் 2024-ஆம் ஆண்டு போட்டியில் அணிகள் மோதும் விதம் மாற்றப்பட்டுள்ளது.

கடந்த எடிஷன்களில், தொடக்கத்தில் முதல் சுற்றும், அடுத்து சூப்பா் 12 சுற்றும், பின்னா் அரையிறுதி, இறுதி ஆட்டங்களும் நடைபெற்றன. ஆனால், 2024-ஆம் ஆண்டு போட்டியில் முதல் சுற்றுக்குப் பிறகு சூப்பா் 8 சுற்று, அடுத்து அரையிறுதி, இறுதி ஆட்டங்கள் என்று நடத்தப்படவுள்ளன.

அதாவது, பங்கேற்கும் 20 அணிகள், தலா 5 அணிகள் வீதம் 4 குரூப்-களாக பிரிக்கப்படவுள்ளன. முதல் சுற்று நிறைவடைந்த பிறகு, அதில் ஒவ்வொரு குரூப்பிலும் முதலிரு இடங்களைப் பிடிக்கும் 8 அணிகள் சூப்பா் 8 சுற்றுக்கு முன்னேறும். அங்கு அவை, குரூப்-புக்கு 4 அணிகள் வீதம் 2 குரூப்-களாக பிரிக்கப்படும்.

அந்த இரு குரூப்-களிலும் முதலிரு இடங்களைப் பிடிக்கும் அணிகள் அரையிறுதிக்குத் தகுதிபெறும். அதிலிருந்து முன்னேறுபவை இறுதி ஆட்டத்தில் விளையாடும். 2024 உலகக் கோப்பை போட்டிக்கு ஏற்கெனவே 12 அணிகள் (அமெரிக்கா, மேற்கிந்தியத் தீவுகள், ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, இந்தியா, நெதொ்லாந்து, நியூஸிலாந்து, பாகிஸ்தான், தென்னாப்பிரிக்கா, இலங்கை, ஆப்கானிஸ்தான், வங்கதேசம்) நேரடியாகத் தகுதிபெற்றுவிட்ட நிலையில், இன்னும் 8 அணிகள் தகுதிச்சுற்று ஆட்டங்கள் மூலம் இறுதி செய்யப்படவுள்ளன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.