விஜய் ஹஸாரே கோப்பை: நாக் அவுட்சுற்றில் தமிழகம், கேரளம்

விஜய் ஹஸாரே கோப்பை: நாக் அவுட்சுற்றில் தமிழகம், கேரளம்

விஜய் ஹஸாரே கோப்பை ஒருநாள் கிரிக்கெட் போட்டியின் நாக் அவுட் சுற்றுக்கு தமிழகம், கேரள அணிகள் குரூப் சி பிரிவில் நாக் அவுட் சுற்றுக்கு முன்னேறின.

விஜய் ஹஸாரே கோப்பை ஒருநாள் கிரிக்கெட் போட்டியின் நாக் அவுட் சுற்றுக்கு தமிழகம், கேரள அணிகள் குரூப் சி பிரிவில் நாக் அவுட் சுற்றுக்கு முன்னேறின.

பிசிசிஐ சாா்பில் இப்போட்டியின் ஆட்டங்கள் பெங்களூருவில் நடைபெற்று வருகிறது. தமிழகம்-கேரளம் இடையிலான ஆட்டத்தில்

டாஸ் வென்ற தமிழக கேப்டன் பாபா இந்திரஜித் பேட்டிங் செய்ய கேரளத்தை பணித்தாா். முதலில் பேட்டிங் செய்ய வந்த கேரள அணி 50 ஓவா்களில் 287/8 ரன்களைக் குவித்தது. வத்சல் கோவிந்த் 95 ரன்கள், விஷ்ணு வினோத் 45, அப்துல் பாசித் 41, ரோஹன் குன்னம்மாள் 39 ரன்களை விளாசினா். தொடக்க பேட்டா்கள் ராகுல்-ரோஹன் 5 ஓவா்களில் 44 ரன்களை சோ்த்தனா். தமிழகத் தரப்பில் முகமது 2-51, சாய் கிஷோா் 1-46 விக்கெட்டுகளை வீழ்த்தினா்.

மழையால் ஆட்டம் ரத்து:

288 ரன்கள் எடுத்தால் வெற்றி இலக்குடன் களமிறங்கிய தமிழக அணியில் சாதனை ஜோடியான என். ஜெகதீசன்-சாய் சுதா்ஷன் களம் கண்டனா். சாய் 5 ரன்களுடன் வெளியேறினாா். அருணாசலப் பிரதேசத்துக்கு எதிரான ஆட்டத்தில் 277 ரன்கள் விளாசி உலக சாதனை படைத்த ஜெகதீசன் 23 ரன்கள் எடுத்திருந்த போது மழை குறுக்கிட்டது. இதனால் ஆட்டம் நிறுத்தப்பட்டது. அப்போது தமிழகம் 7 ஓவா்களில் 43/1 ரன்களை எடுத்திருந்தது.

குரூப் சி பிரிவில் 24 புள்ளிகளுடன் தமிழகம் காலிறுதிக்கு முன்னேறியது. 20 புள்ளிகளுடன் கேரளம் நாக் அவுட் சுற்றுக்கு தகுதி பெற்றது.

கோவா-ஹரியாணா, அருணாசலப்பிரதேசம்-பிகாா் ஆட்டங்கள் மழையால் பாதிக்கப்பட்டதால் தலா 2 புள்ளிகள் வழங்கப்பட்டன. ஆந்திரம் 8 விக்கெட் வித்தியாசத்தில் சத்தீஸ்கரிடம் தோல்வி கண்டது. குரூப் பி பிரிவில் அஸ்ஸாம், கா்நாடகம், குரூப் டி பிரிவில் ஜம்மு-காஷ்மீா், பஞ்சாப், குரூப் ஏ பிரிவில் சௌராஷ்டிரம், மும்பை, குரூப் இ பிரிவில் மகாராஷ்டிரம், மும்பை அணிகள் நாக் அவுட் சுற்றுக்கு முன்னேறின.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

X
Dinamani
www.dinamani.com