உலகக் கோப்பை: மைதானத்தைச் சுத்தம் செய்யும் ஜப்பான் ரசிகர்கள்

கால்பந்து வீரர்கள் மட்டுமல்லாமல் ஜப்பான் கால்பந்து ரசிகர்களும் உலகின் கவனத்தை ஈர்த்து பாராட்டைப் பெற்றுள்ளார்கள்.  
உலகக் கோப்பை: மைதானத்தைச் சுத்தம் செய்யும் ஜப்பான் ரசிகர்கள்

கால்பந்து உலகக் கோப்பைப் போட்டியில் 2-1 என ஜெர்மனியை வீழ்த்தி கால்பந்து ரசிகர்களின் பாராட்டைப் பெற்றுள்ளது ஜப்பான் அணி.

ஜப்பான் கால்பந்து வீரர்கள் மட்டுமல்லாமல் ஜப்பான் கால்பந்து ரசிகர்களும் உலகின் கவனத்தை ஈர்த்து பாராட்டைப் பெற்றுள்ளார்கள்.  

ஆட்டம் முடிந்த பிறகு கலிஃபா சர்வதேச மைதானம் காலியானது. ஆனால் ஜப்பான் ரசிகர்கள் உடனடியாக மைதானத்தை விட்டு நகரவில்லை. அங்குக் கூடுதலாக நேரம் செலவிட்டு துப்புரவுப் பணிகளில் ஈடுபட்டார்கள். சமீபகாலமாக இதுபோன்ற செய்திகளில் ஜப்பான் ரசிகர்கள் அடிக்கடி இடம்பெறுகிறார்கள். தற்போது கால்பந்து உலகக் கோப்பையிலும் தங்களுடைய குணாதிசயத்தையும் பொறுப்புணர்வையும் வெளிப்படுத்தியுள்ளார்கள். 

உங்களுக்கு இது பெரியதாகத் தெரியலாம். ஆனால் எங்களுக்கு இது சாதாரண, வழக்கமான விஷயம் எனப் பேட்டியளித்துள்ளார்கள் ஜப்பான் ரசிகர்கள். சுத்தம் செய்யாமல் ஓர் இடத்தை விட்டு நகரமாட்டோம். எங்களுடைய பள்ளிகளிலேயே இது கற்றுத் தரப்படுகிறது. தினமும் துப்புரவுப் பணிகளில் ஈடுபடுவோம் என்றும் அவர்கள் கூறியுள்ளார்கள். ஜப்பான் விளையாடாத ஆட்டங்களுக்கு வருகை தரும் ஜப்பான் ரசிகர்களும் துப்புரவுப் பணிகளில் ஈடுபடுவது கத்தார் மக்களை மிகவும் ஈர்த்துள்ளது. ஜப்பான் ரசிகர்கள் இந்தச் செயல் சமூகவலைத்தளங்களில் பலத்த பாராட்டைப் பெற்றுள்ளது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com