சையத் முஷ்டாக் அலி: தமிழக அணிக்கு முதல் வெற்றி!

2022 சையத் முஷ்டாக் அலி கோப்பை டி20 போட்டியில் தமிழக அணிக்கு முதல் வெற்றி கிடைத்துள்ளது.
வாஷிங்டன் சுந்தர் (கோப்புப் படம்)
வாஷிங்டன் சுந்தர் (கோப்புப் படம்)
Updated on
1 min read

2022 சையத் முஷ்டாக் அலி கோப்பை டி20 போட்டியில் தமிழக அணிக்கு முதல் வெற்றி கிடைத்துள்ளது.

முதல் ஆட்டத்தில் சத்தீஸ்கரிடம் தோற்ற தமிழக அணி, 2-வது ஆட்டத்தில் ஒடிஷாவை எதிர்கொண்டது. லக்னெளவில் நடைபெற்ற ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த ஒடிஷா அணி, 20 ஓவர்களில் 3 விக்கெட் இழப்புக்கு 141 ரன்கள் எடுத்தது. சுப்ரான்ஷு 65 ரன்கள் எடுத்தார். நடராஜன் 2 விக்கெட்டுகளையும் வாஷிங்டன் 1 விக்கெட்டையும் எடுத்தார்கள்.

தமிழக அணி, 18.5 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 143 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. கேப்டன் பாபா அபரஜித் 42 பந்துகளில் 63 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com