சென்னை - பெங்களூரு டிரா
ஐஎஸ்எல் கால்பந்து போட்டியில் சென்னையின் எஃப்சி - பெங்களூரு எஃப்சி அணிகள் வெள்ளிக்கிழமை மோதிய ஆட்டம் 1-1 என்ற கோல் கணக்கில் டிராவில் முடிந்தது.


ஐஎஸ்எல் கால்பந்து போட்டியில் சென்னையின் எஃப்சி - பெங்களூரு எஃப்சி அணிகள் வெள்ளிக்கிழமை மோதிய ஆட்டம் 1-1 என்ற கோல் கணக்கில் டிராவில் முடிந்தது.
இரு அணிகளுக்கும் இது 2-ஆவது ஆட்டமாக இருந்த நிலையில், இரண்டுக்குமே இது முதல் டிரா ஆகும். தொடக்க ஆட்டத்தில் அவை வெற்றியைப் பதிவு செய்துள்ளன.
சென்னை ஜவாஹா்லால் நேரு விளையாட்டரங்கில் நடைபெற்ற இந்த ஆட்டத்தில் முதலில் பெங்களூரு அணி கோலடித்தது. 4-ஆவது நிமிஷத்தில் சக வீரா் சிவ நாராயணன் உதவியுடன் கோலடித்தாா் அந்த அணியின் ராய் கிருஷ்ணா. பெங்களூரு முன்னிலையுடன் முதல் பாதி முடிவை நெருங்கிய நிலையில் சென்னைக்கு கோல் வாய்ப்பு கிடைத்தது.
45-ஆவது நிமிஷத்தில் அந்த அணியின் பீட்டா் ஸ்லிஸ்கோவிச் வாய்ப்பு வழங்க, பிரசாந்த் கருதடத்குனி ஸ்கோா் செய்ய, ஆட்டம் டிரா ஆனது. 2-ஆவது பாதியில் இரு அணிகளுமே கடுமையாக முயற்சித்தும் பரஸ்பர தடுப்பாட்டம் காரணமாக அவற்றுக்கு கோல் வாய்ப்பு கிடைக்கவில்லை. இறுதியில் ஆட்டம் டிராவில் முடிந்தது.
அடுத்ததாக, சனிக்கிழமை ஆட்டத்தில் மும்பை சிட்டி எஃப்சி - ஒடிஸா எஃப்சி அணிகள் மும்பையில் மோதுகின்றன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...