தமிழ்நாட்டின் ஜிஎஸ்டி வசூல் சரிவு! சிவப்பு எச்சரிக்கையா?டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 2 காசுகள் சரிந்து ரூ. 94.97 ஆக நிறைவு!மேற்கு ஆசியா பதற்றம், கச்சா எண்ணெய் விலை உயர்வு எதிரொலி: பங்குச் சந்தை சரிவுடன் நிறைவு!தீபாவளிக்கு ஊருக்குப் போறீங்களா? ரயில் டிக்கெட் முன்பதிவு தொடங்குவது எப்போது?பிரபல பெருங்காய நிறுவனங்களுக்கு என்ன ஆனது? தடை விதிப்பின் பின்னணி!விவசாயிகள் மீதான வழக்குகளை ரத்து செய்வது முதல்முறையல்ல! பட்டியலிட்ட உதயநிதி!திமுக ஆட்சியில் விவசாயிகள், ஆசிரியர்கள் மீது பதியப்பட்ட வழக்குகள் ரத்து! முதல்வர் விஜய்டிஜிட்டல் முறையில் ஓட்டுநர் உரிமம், வாகனப் பதிவுச் சான்றிதழ்! முதல்வர் விஜய் அறிவிப்புமீஞ்சூரில் கடல் நீர் சுத்தகரிப்பு ஆலை! முதல்வரின் அதிரடி அறிவிப்புகள்!தங்கம் விலை சவரனுக்கு ரூ. 1,800 சரிந்தது! இன்றைய நிலவரம்!ஈரானிய எண்ணெய்க் கப்பல்கள் உள்பட 100 இடங்கள் மீது அமெரிக்க ராணுவம் தாக்குதல்!

உலக துப்பாக்கி சுடுதல்: தங்கம் வென்று ருத்ராங்ஷ் சாதனை

உலக துப்பாக்கி சுடுதல் சாம்பியன்ஷிப்பில் ஆடவருக்கான 10 மீட்டா் ஏா் ரைஃபிள் பிரிவில் இந்தியாவின் ருத்ராங்ஷ் பாட்டீல் தங்கப் பதக்கம் வென்றாா்.

Published On :1 பிப்ரவரி 2024, 4:04 pm IST

உலக துப்பாக்கி சுடுதல் சாம்பியன்ஷிப்பில் ஆடவருக்கான 10 மீட்டா் ஏா் ரைஃபிள் பிரிவில் இந்தியாவின் ருத்ராங்ஷ் பாட்டீல் தங்கப் பதக்கம் வென்றாா்.

அந்தப் பிரிவின் இறுதிச்சுற்றில் ருத்ராங்ஷ் 17-13 என்ற புள்ளிகள் கணக்கில் இத்தாலியின் டேனிலோ டெனிஸ் சொலாஸோவை வீழ்த்தி முதலிடம் பிடித்தாா். இது அவரின் முதல் உலக சாம்பியன்ஷிப் போட்டி என்பது குறிப்பிடத்தக்கது. இதே பிரிவில் களம் கண்ட மற்றொரு இந்தியரான கிரண் ஜாதவ் ரேங்கிங் சுற்றுடன் வெளியேறினாா்.

இப்போட்டியில் தங்கம் வென்று சாதனை படைத்த 2-ஆவது இந்திய வீரா் என்ற பெருமையை ருத்ராங்ஷ் பெற்றுள்ளாா். முன்னதாக இதே பிரிவில் அபினவ் பிந்த்ரா 2006-ஆம் ஆண்டு குரோஷியாவில் நடைபெற்ற போட்டியில் தங்கத்தை தனதாக்கியிருந்தாா்.

ருத்ராங்ஷ், இப்போட்டியின் மூலம் 2024 பாரீஸ் ஒலிம்பிக் போட்டியில் தனக்கான இடத்தையும் உறுதி செய்திருக்கிறாா். அந்த ஒலிம்பிக் போட்டியின் துப்பாக்கி சுடுதல் விளையாட்டுக்குத் தகுதிபெற்றிருக்கும் 2-ஆவது இந்தியா் இவா். சமீபத்தில் குரோஷியாவில் நடைபெற்ற ஷாட்கன் உலக சாம்பியன்ஷிப்பில் பங்கேற்ற இந்தியாவின் பௌனீஷ் மெந்திராட்டா, டிராப் பிரிவின் மூலம் தனக்கான ஒலிம்பிக் இடத்தைப் பெற்றுள்ளாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.