முந்தைய அரசுகளின் திட்டங்கள் தொடரும்! பேரவையில் முதல்வர் விஜய் உறுதிநம்பிக்கை வாக்கெடுப்பில் வெற்றி! தவெக அரசுக்கு 144 பேர் ஆதரவு! நம்பிக்கை வாக்கெடுப்பு: திமுக எம்.எல்.ஏ.க்கள் வெளிநடப்பு! குதிரை வேகத்தில் செயல்படும் அரசு; குதிரை பேரத்தில் ஈடுபடும் அரசு அல்ல! விஜய் பேச்சுபுஸ்பா பட பாணியில் சோபா ஆட்சி செய்யும் விஜய்! உதயநிதி கடும் விமர்சனம்! நம்பிக்கை வாக்கெடுப்பு! பேரவைக்கு வராமல் மதிமுக எம்.எல்.ஏ.க்கள் புறக்கணிப்பு!நம்பிக்கை வாக்கெடுப்பில் பாஜக நடுநிலை! - எம்.எல்.ஏ. போஜராஜன்தவெகவில் குதிரை பேரம் நடந்தது; ஜோதிடருக்கு எதற்கு அரசுப் பதவி? பிரேமலதா
/

போராடி தோற்ற நமீபியா, சூப்பர் 12க்குள் நுழைந்த நெதர்லாந்து

சூப்பர் 12 சுற்றுக்கு தகுதி பெறுவதற்கான போட்டியில் ஐக்கிய அரபு அமீரகத்திடம்  நமீபியா 7 ரன்கள் வித்தியாசத்தில் போராடி தோல்வியடைந்தது.

News image
Updated On :20 அக்டோபர் 2022, 5:30 pm IST

சூப்பர் 12 சுற்றுக்கு தகுதி பெறுவதற்கான போட்டியில் ஐக்கிய அரபு அமீரகத்திடம்  நமீபியா 7 ரன்கள் வித்தியாசத்தில் போராடி தோல்வியடைந்தது.

இன்று (அக்டோபர் 20) நடைபெற்ற ஆட்டத்தில் ஐக்கிய அரபு அமீரகத்தை எதிர்த்து விளையாடிய நமீயா போராடி தோல்வியடைந்தது.

டாஸ் வென்று முதலில் பேட் செய்த ஐக்கிய அரபு அமீரகம் 3 விக்கெட்டுகள் இழப்பிற்கு 148 ரன்கள் குவித்தது. 

இதனையடுத்து, 149 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி களமிறங்கியது நமீபியா. அந்த அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக மைக்கேல் வான் லிங்கன் மற்றும் ஸ்டீபர் பார்டு களமிறங்கினர். மைக்கேல் 10 ரன்களிலும், ஸ்டீபன் பார்டு 4 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். இதனையடுத்து களமிறங்கிய ஜேன் நிக்கோல் 1 ரன்னிலும், கேப்டன் எராஸ்மஸ் 16 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். இதனால், நமீபியா 43 ரன்களுக்கு 4 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. அதன்பின்னர் களமிறங்கிய நமீபிய வீரர்கள் வந்த வேகத்தில் பெவிலியன் திரும்ப அந்த அணி 69 ரன்களுக்கு 7 விக்கெட்டுகளை பறிகொடுத்தது. இதனால், ஐக்கிய அரபு அமீரகம் எளிதில் வெற்றி பெறுவது போன்ற சூழல் உருவானது. 

அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்த நமீபியாவிற்கு நம்பிக்கை அளிக்கும் விதமாக டேவிட் விசே அதிரடியாக விளையாடி ரன்களை சேர்த்தார். மறுமுனையில் அவருக்கு உறுதுணையாக ரூபென் விக்கெட்டை பறிகொடுக்காமல் நிதானமான ஆட்டத்தினை வெளிப்படுத்தினார். அதிரடியாக விளையாடிய டேவிட் விசே அரைசதம் அடித்து அசத்தினார். 

இறுதி ஓவரில் வெற்றிக்கு 14 ரன்கள் தேவைப்பட முதல் 3 பந்துகளில் நமீபியாவிற்கு 4 ரன்கள் கிடைத்தன. இதனால் 3 பந்துகளில் 10 ரன்கள் எடுக்க வேண்டும் என்ற சூழல் உருவாகியது. இறுதி ஓவரின் 4வது பந்தில் சிக்ஸர் அடிக்க முயன்று டேவிட் விசே எல்லைக் கோட்டில் நின்ற ஃபீல்டரிடம் கேட்ச் ஆனார். அதிரடியாக விளையாடிய அவர் 36 பந்துகளில் 55 ரன்கள் குவித்தார். அதில் 3 பவுண்டரிகள் மற்றும் 3 சிக்ஸர்கள் அடங்கும்.

இறுதியில் நமீபியா 8 விக்கெட்டுகளை இழந்து 141 ரன்கள் மட்டுமே குவித்தது. இதனால் 7 ரன்கள் வித்தியாசத்தில் ஐக்கிய அரபு அமீரகம் வெற்றி பெற்றது.

இந்தப் போட்டியில் வெற்றி பெற்றால் நமீபியா சூப்பர் 12 சுற்றுக்கு ரன் ரேட் அடிப்படையில் தகுதி பெறும் வாய்ப்பிருந்தது. ஆனால், ஐக்கிய அரபு அமீரகத்திடம் தோல்வியடைந்ததன் மூலம் நெதர்லாந்து சூப்பர் 12 சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.