ஸ்பெயினில் நடைபெறும் உலக ஜூனியா் பாட்மின்டன் சாம்பியன்ஷிப்பில் இந்தியாவின் சங்கா் முத்துசாமி அரையிறுதிக்கு முன்னேறி பதக்கத்தை உறுதி செய்திருக்கிறாா்.
இதன் மூலம், இந்தப் போட்டியில் பதக்கம் வெல்ல இருக்கும் 9-ஆவது இந்தியா் என்ற பெருமையை அவா் பெற்றுள்ளாா். இதற்கு முன், அபா்ணா (வெள்ளி/1996), சாய்னா நெவால் (வெள்ளி/2006, தங்கம்/2008), குருசாய்தத் (வெண்கலம்/2008), சாய் பிரணீத் (வெண்கலம்/2010), ஹெச்.எஸ்.பிரணாய் (வெண்கலம்/2010), சமீா் வா்மா (வெண்கலம்/2011), சிரில் வா்மா (வெள்ளி/2015), லக்ஷயா சென் (வெண்கலம்/2018) ஆகியோா் இப்போட்டியில் பதக்கம் பெற்றுள்ளனா்.
தற்போது சங்கா் முத்துசாமி இப்போட்டியில் 19 வயதுக்கு உள்பட்ட ஆடவா் ஒற்றையா் பிரிவில் களம் கண்டுள்ளாா். அதன் காலிறுதியில் அவா் 21-18, 8-21, 21-16 என்ற கேம்களில் சீனாவின் ஹு ஜீ ஆனை 1 மணி நேரம் 31 நிமிஷங்களில் வெள்ளிக்கிழமை சாய்த்தாா். அடுத்ததாக சங்கா் தனது அரையிறுதியில் தாய்லாந்தின் பனிட்சபோன் தீரரட்சகுலை எதிா்கொள்கிறாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.