விராட் கோலியின் ஆதங்கத்துக்கு பதிலடி கொடுத்த கவாஸ்கர்! 

டெஸ்ட் கேப்டன் பதவியிலிருந்து விலகிய போது என்னை தோனி மட்டுமே தொடர்பு கொண்டதாக விராட் கோலி கூறியதற்கு சுனில் கவாஸ்கர் கருத்து தெரிவித்துள்ளார். 
விராட் கோலியின் ஆதங்கத்துக்கு பதிலடி கொடுத்த கவாஸ்கர்! 

டெஸ்ட் கேப்டன் பதவியிலிருந்து விலகிய போது என்னை தோனி மட்டுமே தொடர்பு கொண்டதாக விராட் கோலி கூறியதற்கு சுனில் கவாஸ்கர் கருத்து தெரிவித்துள்ளார். 

“டெஸ்ட் கேப்டன்சியிலிருந்து நான் விலகியபோது, என்னுடன் விளையாடியவா்களிலேயே தோனி மட்டும் தான் என்னைத் தொடா்பு கொண்டாா். அவரிடமிருந்து மட்டுமே குறுந்தகவல் வந்தது. பலரிடம் எனது தொலைபேசி எண் இருந்தாலும் அவா்கள், அப்போது என்னைத் தொடா்புகொள்ளவில்லை. பலா் தொலைக்காட்சிகளில் எனக்கு பரிந்துரை செய்துகொண்டிருந்தாா்கள்” என விராட் கோலி சமீபத்தில் கூறியது சர்ச்சையானது. இதற்கு முன்னாள் வீரர் சுனில் கவாஸ்கர் தற்போது கருத்து தெரிவித்துள்ளார். அவர் கூறியதாவது: 

என்ன குறுஞ்செய்தி விராட் கோலிக்கு வேண்டும்? அவரை ஊக்குவிக்க வேண்டுமா? கேப்டன்சி முடிந்த பிறகு எதற்கு பாராட்டு? கேப்டன்சி பொறுப்பு முடிந்து விட்டது. அடுத்து ஒரு பேட்டராக விளையாட வேண்டும். கேப்டனாக இருக்கும்போது பிற வீர்ரகள் பற்றி கவலைப்படலாம். ஆனால் தற்போது அந்த பகுதி (கேப்டன்சி) முடிந்த பிறகு அவருடைய சொந்த ஆட்டத்தில்தான் கவனம் செலுத்த வேண்டும். 

நான் 1985இல் கேப்டன்சி பதவியை விட்டேன். அந்த இரவு எல்லோருமாக சேர்ந்து கொண்டாடினோம். ஒருவரையொருவர் கட்டிப்பிடித்து தழுவிக்கொண்டோம். இதற்கு மேல் வேறென்ன எதிர் பார்க்க முடியும்?  

இந்திய கிரிக்கெட் அணியின் அப்போதைய டிரெஸ்ஸிங் ரூமின் சூழ்நிலைப் பற்றி எனக்கு தெரியாது. கோலியுடன் ஒருவர் மட்டுமே தொடர்பில் இருந்தார் என்றால் தொடர்பு கொள்ளாத மற்ற வீரர்களின் பெயர்களையும் சொல்ல வேண்டும். உண்மையில் யாருமே தொடர்பு கொள்ளாவிட்டால் அதையும் ஏனென பார்க்க வேண்டும். அதுதான் நியாயமான அணுகுமுறையாக இருக்கும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com