ஆசியக் கோப்பை: ஜெயிக்க வேண்டிய கட்டாயத்தில் இந்திய அணி!

ஆசியக் கோப்பைப் போட்டியில் இலங்கையுடனான இன்றைய ஆட்டத்தில் ஜெயிக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளது இந்திய அணி.
ஆசியக் கோப்பை: ஜெயிக்க வேண்டிய கட்டாயத்தில் இந்திய அணி!

ஆசியக் கோப்பைப் போட்டியில் இலங்கையுடனான இன்றைய ஆட்டத்தில் ஜெயிக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளது இந்திய அணி.

ஆசியக் கோப்பை சூப்பர் 4 சுற்றில் இந்தியா - பாகிஸ்தான் அணிகள் மோதின. துபையில் நடைபெற்ற ஆட்டத்தில் பாகிஸ்தான் அணி இலக்கை ரன்கு விரட்டி 19.5 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 182 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. 

சூப்பர் 4 சுற்றில் முதல் ஆட்டத்தில் தோல்வியடைந்த இந்திய அணி இன்று நடைபெறும் ஆட்டத்தில் இலங்கையை எதிர்கொள்கிறது. இந்த ஆட்டத்தில் இந்திய அணி வெல்லாவிட்டால் போட்டியிலிருந்து வெளியேறுவதற்கான வாய்ப்புகள் அதிகமாகிவிடும். இதில் தோற்று ஆப்கானிஸ்தானை அடுத்த ஆட்டத்தில் வென்றால் இதர அணிகளின் உதவியை இந்தியா எதிர்பார்க்க வேண்டியிருக்கும். இந்தியாவை இலங்கை தோற்கடித்து பிறகு பாகிஸ்தானையும் தோற்கடித்தால் மட்டுமே இந்திய அணியால்  நெட் ரன்ரேட் அடிப்படையில் இறுதிச்சுற்றுக்குத் தகுதி பெற முடியும். அந்த நெருக்கடிக்குப் பதிலாக மீதமுள்ள இரு ஆட்டங்களில் வெற்றி பெற்று இறுதிச்சுற்றுக்குத் தகுதி பெறவே இந்திய அணி விரும்பும். 

இலங்கை அணியில் குசால் மெண்டிஸ், பதும் நிஸ்ஸங்கா, குணதிலகா, பனுகா, ஷனகா என திறமையான பேட்டர்கள் உள்ளார்கள். பந்துவீச்சில் ஹசரங்கா, மஹீஸ் தீக்‌ஷனா என திறமையான சுழற்பந்து வீச்சாளர்கள் நடு ஓவர்களில் தாக்கத்தை ஏற்படுத்துவார்கள். இதனால் இந்திய அணிக்கு இந்த ஆட்டம் சவாலாகவே அமையும். 

செப்டம்பர் 2021 முதல் இலக்கை விரட்டுவதில் நல்ல தேர்ச்சியை அடைந்துள்ளது இலங்கை அணி.11 ஆட்டங்களில் 7 ஆட்டங்களில் இலக்கை வெற்றிகரமாக விரட்டியது. அதேசமயம் முதலில் பேட்டிங் செய்கிறபோது 11 ஆட்டங்களில் 2-ல் மட்டுமே வெற்றி பெற்றிருக்கிறது. ஆசியக் கோப்பைப் போட்டியில் ஆப்கானிஸ்தானுக்கு எதிராக முதலில் பேட்டிங் செய்து 105 ரன்களுக்கு ஆட்டமிழந்து தோற்றது இலங்கை. அடுத்த இரு ஆட்டங்களில் 184, 176 என்கிற கடினமான இலக்குகளை வெற்றிகரமாக விரட்டியது இலங்கை. இதனால் இந்தியாவுக்கு எதிரான ஆட்டத்தில் இலங்கை அணி முதலில் பந்துவீசுவதையே விரும்பும். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com