யு.எஸ். ஓபன் போட்டியில் இறுதிச்சுற்றுக்குப் பிரபல வீராங்கனைகளான ஸ்வியாடெக், ஆன்ஸ் ஜபேர் ஆகியோர் தகுதியடைந்துள்ளார்கள்.
யு.எஸ். ஓபன் மகளிர் ஒற்றையர் பிரிவு அரையிறுதியில் ஸ்வியாடெக் - அரினா சபலேன்கா, ஆன்ஸ் ஜபேர் - கரோலினா கார்சியா இடையிலான மோதல் நடைபெற்றது.
பிரெஞ்சு ஓபன் போட்டியை இருமுறை வென்ற ஸ்வியாடெக் 3-6, 6-1, 6-4 என்ற செட் கணக்கில் சபலேன்காவை வீழ்த்தினார். முதல்முறையாக யு.எஸ். ஓபன் இறுதிச்சுற்றுக்கு முன்னேறியுள்ளார்.
ஆன்ஸ் ஜபேர், 6-1, 6-3 என்ற நேர் செட்களில் கரோலினா கார்சியாவை வீழ்த்தினார். இதன்மூலம் கிராண்ட் ஸ்லாம் போட்டியின் இறுதிச்சுற்றுக்கு இருமுறை தகுதியடைந்த முதல் ஆப்பிரிக்க வீராங்கனை என்கிற பெருமையை அவர் அடைந்துள்ளார். கடந்த ஜூலையில் விம்பிள்டன் இறுதிச்சுற்றுக்கு முன்னேறினார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

திமுக இரட்டை வேடம்! தமிழ்நாட்டில் ஒரு கொள்கை; புதுவையில் வேறு கொள்கை - இபிஎஸ்

இந்த வாரம் கலாரசிகன் - 05-04-2026

பகல் கனவு பலிக்காது!

பொய்யடிமை இல்லாத புலவர்
வீடியோக்கள்

தில்லியைக் காப்பாற்றி வரும் சமீர் ரிஸ்வி! | Sameer Rizvi |
தினமணி செய்திச் சேவை

”விசிகவிற்கு எந்த அழுத்தமும் இல்லை!” திருமா பதில்! | VCK | DMK
தினமணி செய்திச் சேவை

அண்ணாமலை விவகாரத்தில் எடப்பாடி ROLE | SP Lakshmanan Interview | Annamalai | Thirumavalavan
இணையதளச் செய்திப் பிரிவு

”தேர்தலில் போட்டியிடவில்லை! நிலைப்பாட்டை தள்ளி வைக்கிறேன்!”: திருமாவளவன் | VCK
இணையதளச் செய்திப் பிரிவு


