கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

பதவி விலக தெ.ஆ. பயிற்சியாளர் முடிவு

டி20 உலகக் கோப்பைப் போட்டிக்குப் பிறகு தென்னாப்பிரிக்க அணியின் பயிற்சியாளர் பதவியிலிருந்து விலக...

News image
பெளச்சர் (கோப்புப் படம்)
Updated On :13 செப்டம்பர் 2022, 11:21 am

DIN

டி20 உலகக் கோப்பைப் போட்டிக்குப் பிறகு தென்னாப்பிரிக்க அணியின் பயிற்சியாளர் பதவியிலிருந்து விலக மார்க் பெளச்சர் முடிவெடுத்துள்ளார்.

2019 டிசம்பர் முதல் தென்னாப்பிரிக்க அணியின் தலைமைப் பயிற்சியாளராக உள்ளார் முன்னாள் வீரர் மார்க் பெளச்சர். 2023 ஒருநாள் உலகக் கோப்பை வரை பயிற்சியாளராக நீடிக்க ஒப்பந்தம் செய்திருந்தார். இந்நிலையில் ஆஸ்திரேலியாவில் நடைபெறவுள்ள டி20 உலகக் கோப்பைப் போட்டியுடன் பயிற்சியாளர் பதவியிலிருந்து விலக பெளச்சர் முடிவெடுத்துள்ளதாக தென்னாப்பிரிக்க கிரிக்கெட் வாரியம் தெரிவித்துள்ளது. 

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டியில் புள்ளிகள் பட்டியலில் 7-ம் இடத்திலிருந்து முதலிடத்துக்கு முன்னேறியது, 11 டெஸ்ட் வெற்றிகள், இந்தியாவைச் சொந்த மண்ணில் 2-1 என டெஸ்ட் தொடரில் வீழ்த்தியது, 2021 டி20 உலகக் கோப்பைப் போட்டியில் தொடர்ச்சியாக 5 வெற்றிகள் என பெளச்சர் பயிற்சியாளராக இருந்த காலக்கட்டத்தில் தென்னாப்பிரிக்க அணி பல சாதனைகளை நிகழ்த்தியுள்ளது. எனினும் இங்கிலாந்தில் சமீபத்தில் நடைபெற்ற டெஸ்ட் தொடரில் 1-2 என இங்கிலாந்திடம் தோற்றது தெ.ஆ. அணி.

இதையடுத்து தென்னாப்பிரிக்காவில் அடுத்த வருடம் நடைபெறவுள்ள எஸ்ஏ20 லீக் போட்டியில் எம்ஐ கேப் டவுன் அணியின் தலைமைப் பயிற்சியாளராக பெளச்சர் பணியாற்றுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.