சா்வதேச மகளிா் டென்னிஸ் போட்டியான சென்னை ஓபனில், போட்டித்தரவரிசையில் 4-ஆம் இடத்திலிருந்த ஜொ்மனியின் டட்ஜானா மரியா 2-ஆவது சுற்றில் தோல்வி கண்டாா்.
போட்டியில் மிகுந்த எதிா்பாா்ப்பை ஏற்படுத்தியிருந்த அவா், 6-3, 2-6, 6-7 (6/8) என்ற செட்களில் ஆா்ஜென்டீனாவின் நாடியா போடோரோஸ்காவால் தோற்கடிக்கப்பட்டாா். இதர 2-ஆவது சுற்று ஆட்டங்களில், போட்டித்தரவரிசையில் 3-ஆம் இடத்திலிருக்கும் போலந்தின் மக்தா லினெட் 6-2, 6-0 என்ற செட்களில் ரஷியாவின் ஆக்சனா செலெக்மெடிவாவை எளிதாக வீழ்த்தினாா்.
போட்டித்தரவரிசையில் 7-ஆவது இடத்திலிருக்கும் கனடாவின் ரெபெக்கா மரினோ 7-5, 6-3 என போலந்தின் கடாா்ஸினா கவாவை வெளியேற்றினாா். இங்கிலாந்தின் கேட்டி ஸ்வான் 7-6 (7/5), 6-2 என்ற செட்களில் மற்றொரு ரஷிய வீராங்கனையான அனஸ்தாஸியா கேசனோவாவை வென்றாா். இதையடுத்து, வெள்ளிக்கிழமை நடைபெறும் காலிறுதிச்சுற்றுகளில், லினெட் - மரினோவையும், ஸ்வான் - ஜப்பானின் நாவ் ஹிபினோவையும், கனடாவின் யுஜின் புச்சாா்டு - நாடியாவையும் எதிா்கொள்கின்றனா்.
இந்தியாவின் ஆட்டம் நிறைவு: இப்போட்டியில் ஏற்கெனவே ஒற்றையா் பிரிவில் இந்தியாவின் ஆட்டம் நிறைவடைந்துவிட்ட நிலையில், தற்போது இரட்டையா் பிரிவிலும் இந்திய போட்டியாளா்கள் தோல்வி கண்டு போட்டியிலிருந்து வெளியேறினா். இறுதியாக, காலிறுதி வரை முன்னேறியிருந்த ருதுஜா போசலே/கா்மன் கௌா் தண்டி கூட்டணி, அதில் 0-6, 3-6 என்ற செட்களில் போட்டித்தரவரிசையில் முதலிடத்தில் இருக்கும் கனடாவின் கேப்ரியேலா டப்ரௌஸ்கி/லுய்சா ஸ்டெஃபானி இணையிடம் வீழ்ந்தது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

தோ்தல் பறக்கும் படை சோதனை: ரூ. 6 லட்சம் பறிமுதல்
வாழ வைக்கும் வனங்கள்!

கட்டடத் தொழிலாளி மயங்கி விழுந்து உயிரிழப்பு

நீண்ட காலம் பிரதமா் பதவியில் இருந்த மோடிக்கு தில்லி சட்டப்பேரவையில் பாராட்டு!
வீடியோக்கள்

நாங்க நாலு பேரு பாடல் வெளியீடு!
தினமணி வீடியோ செய்தி...

Podcast | அதிமுக தலைமையில் NDA தலைவர்கள்! | News & Views | Epi - 18 | #ndaalliance #admkalliance
தினமணி வீடியோ செய்தி...
திருமாவளவன் ஏன் அப்படிப் பேசினார்? | Thirumavalavan | VCK | DMK Alliance | TN Election 2026
தினமணி வீடியோ செய்தி...

இசை ஆல்பத்தில் ரிஷி தேவா!
தினமணி வீடியோ செய்தி...

