சையத் முஷ்டாக் டி20: தமிழக அணி அறிவிப்பு, கேப்டன் நீக்கம்!

சையத் முஷ்டாக் அலி கோப்பை டி20 போட்டிக்கான தமிழக அணி அறிவிக்கப்பட்டுள்ளது. 
சையத் முஷ்டாக் டி20: தமிழக அணி அறிவிப்பு, கேப்டன் நீக்கம்!

சையத் முஷ்டாக் அலி கோப்பை டி20 போட்டிக்கான தமிழக அணி அறிவிக்கப்பட்டுள்ளது. 

2022 சையத் முஷ்டாக் அலி கோப்பைப் போட்டி அக்டோபர் 11 முதல் தொடங்குகிறது. இப்போட்டிக்கான தமிழக அணி அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த வருடம் சாம்பியன் பட்டம் வென்ற தமிழக அணியின் கேப்டனாக இருந்த விஜய் சங்கர் இம்முறை நீக்கப்பட்டுள்ளார். அவருக்குப் பதிலாக பாபா அபரஜித் கேப்டனாக  நியமிக்கப்பட்டுள்ளார். ஐபிஎல் போட்டியில் ஏற்பட்ட காயத்தால் முழு உடற்தகுதியை இன்னும் அடையாமல் உள்ளார் விஜய் சங்கர். இதன் காரணமாக அவர் அணியிலிருந்து நீக்கப்பட்டுள்ளார். வாஷிங்டன் சுந்தர் துணை கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். வேகப்பந்து வீச்சாளர் நடராஜனும் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார். ஆச்சர்யம் தரும் விதமாக 6 சர்வதேச டி20, 42 ஐபிஎல் ஆட்டங்களில் விளையாடியுள்ள 31 வயது வருண் சக்ரவர்த்தி முதல்முறையாகத் தமிழக அணிக்காக விளையாடவுள்ளார். 

எலைட் ஈ பிரிவில் உள்ள தமிழக அணி தனது ஆட்டங்களை லக்னெளவில் விளையாடுகிறது. அக்டோபர் 11 அன்று சத்தீஸ்கர் அணிக்கு எதிராக விளையாடுகிறது. இதன்பிறகு ஒடிஷா, சிக்கிம், பெங்கால், ஜார்க்கண்ட், சண்டீகர் ஆகிய அணிகளுக்கு எதிராக விளையாடுகிறது. 

தமிழ்நாடு

பாபா அபரஜித் (கேப்டன்), வாஷிங்டன் சுந்தர் (துணை கேப்டன்), சாய் சுதர்சன், நடராஜன், ஷாருக் கான், சாய் கிஷோர், சஞ்சய் யாதவ், சந்தீப் வாரியர், எம். சித்தார்த், வருண் சக்ரவர்த்தி, ஜே. சுரேஷ் குமார், ஹரி நிஷாந்த், ஆர். சிலம்பரசன், எம். அஸ்வின், அஜிதேஷ். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com