செஸ்: உலக சாம்பியன் பட்டம் வென்ற இந்திய சிறுவர்கள்!
இந்தியாவைச் சேர்ந்த சார்வி அனில்குமார், சுபி குப்தா ஆகியோர் தங்கம் வென்று சாதனை படைத்துள்ளார்கள்.


உலக கேடட் 2022 செஸ் போட்டியில் இந்தியாவைச் சேர்ந்த சார்வி அனில்குமார், சுபி குப்தா ஆகியோர் தங்கம் வென்று சாதனை படைத்துள்ளார்கள்.
ஜார்ஜியாவில் நடைபெற்ற 8 வயதுக்கு உட்பட்டோருக்கான மகளிர் செஸ் போட்டியில் கர்நாடகத்தைச் சேர்ந்த 8 வயது சார்வி, 9.5 புள்ளிகளுடன் டை பிரேக்கரில் இங்கிலாந்தைச் சேர்ந்த போதனாவை வீழ்த்தி தங்கம் வென்றார். ஓபன் பிரிவுக்கான யு-8 போட்டியில் இந்தியாவின் சஃபின் வெண்கலம் வென்றார்.
மகளிர் யு-12 போட்டியில் இந்தியாவின் சுபி குப்தா (உத்தரப் பிரதேசம்) தங்கம் வென்றார். 8 வயது முதல் 18 வயதுக்கு உட்பட்டோருக்கான பிரிவில் இதுவரை நான்கு இந்தியர்கள் தங்கம் வென்றுள்ளார்கள். இதற்கு முன்பு ஓபன் பிரிவில் இளம்பரிதி, பிரணவ் ஆனந்த் தங்கம் வென்றார்கள்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...