உலகக் கோப்பைக்கான இந்திய அணியின் துணைக் கேப்டன் ஹர்திக் பாண்டியாவா?

இந்திய அணியின் நட்சத்திர ஆல்-ரவுண்டர் ஹர்திக் பாண்டியா உலகக் கோப்பைக்கான இந்திய அணியின் துணைக் கேப்டனாக நியமிக்கப்படலாம் எனத் தகவல்கள் வெளியாகியுள்ளது.
உலகக் கோப்பைக்கான இந்திய அணியின் துணைக் கேப்டன் ஹர்திக் பாண்டியாவா?

இந்திய அணியின் நட்சத்திர ஆல்-ரவுண்டர் ஹர்திக் பாண்டியா உலகக் கோப்பைக்கான இந்திய அணியின் துணைக் கேப்டனாக நியமிக்கப்படலாம் எனத் தகவல்கள் வெளியாகியுள்ளது.

இந்திய அணி உலகக் கோப்பைக்கு முன்னதாக ஆசிய கோப்பை 2022 போட்டிகளில் விளையாட உள்ளது. இந்நிலையில், 20 ஓவர் உலகக் கோப்பை தொடருக்கான இந்திய அணியின் துணைக் கேப்டனாக ஹர்திக் பாண்டியா நியமிக்கப்படலாம் என பிசிசிஐ வட்டாரங்களில் பேசி வருவதாகக் கூறப்படுவது முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.

கே.எல்.ராகுலிடம் இருந்து இந்த துணைக் கேப்டன் பொறுப்பு பாண்டியாவுக்கு வழங்கப்படலாம் எனப் பேசப்பட்டு வருகிறது. இந்திய அணி தற்போது மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான டி20 தொடரில் விளையாடி வருகிறது. இந்தத் தொடரில் கே.எல்.ராகுல் பெயரும் இடம் பெற்றிருந்தது. இருப்பினும், அவருக்கு கரோனா தொற்று உறுதியானதால் இந்தத் தொடரில் அவர் விளையாடவில்லை.

டி20 உலகக் கோப்பைத் தொடருக்கான இந்திய அணியின் துணைக் கேப்டனாக யாரை நியமிக்கலாம் என்ற தேடலில் ஹர்திக் பாண்டியாவின் பெயரே அதிகம் இடம் பெற்றதாக தெரிகிறது. இந்த ஆண்டு ஐபிஎல் போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் அணியின்  கேப்டனாக நியமிக்கப்பட்ட அவர் அந்த அணியை சிறப்பாக வழிநடத்தி அறிமுகமான முதல் ஐபிஎல் சீசனிலேயே சாம்பியன் பட்டம் பெற்றுத் தந்தார். கேப்டனாக மட்டுமில்லாமல் ஒரு சிறந்த ஆல்ரவுண்டராக அவர் ஐபிஎல் போட்டிகளில் வலம் வந்தார். 

அண்மையில் நடந்து முடிந்த இங்கிலாந்து மற்றும் தென்னாப்பிரிக்கா அணிகளுக்கு எதிரான தொடரில் சிறப்பான ஆட்டத்தினை அவர் வெளிப்படுத்தினார். 

இந்திய அணியின் முன்னாள் கேப்டன் விராட் கோலி தனது கேப்டன் பதவியிலிருந்து விலகிய பிறகு ரோகித் சர்மா அணியின் புதிய கேப்டனாக நியமிக்கப்பட்டார். ஒரு நாள் மற்றும் டி20 போட்டிகளில் கே.எல்.ராகுல் துணைக் கேப்டனாக நியமிக்கப்பட்டார். கே.எல்.ராகுல் தனது வெள்ளைப் பந்து போட்டியினை இந்த ஆண்டு பிப்ரவரி மாதம் விளையாடி இருந்தார். அதன்பின் பெரிய அளவில் வெள்ளைப் பந்து போட்டிகளில் அவர் விளையாடவில்லை.

இந்நிலையில், உலகக் கோப்பையின் புதிய துணைக் கேப்டனாக ஹர்திக் பாண்டியா நியமிக்கப்படலாம் எனப் பேசப்பட்டு வருகிறது. இதனால் ரசிகர்கள் மத்தியில் இவர்கள் இருவரில் யார் உலகக் கோப்பை டி20 தொடருக்கான புதிய துணைக் கேப்டனாக நியமிக்கப்படுவார்கள் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com