
காமன்வெல்த் போட்டியில் இந்திய மகளிர் ஹாக்கி அணிக்கு வெண்கலம் கிடைத்துள்ளது.
டோக்கியோ ஒலிம்பிக்ஸில் சிறப்பாக விளையாடிய இந்திய மகளிர் ஹாக்கி அணி, நூலிழையில் வெண்கலப் பதக்கத்தைத் தவறவிட்டது. ஸ்பெயினில் நடைபெற்ற மகளிர் ஹாக்கி உலகக் கோப்பைப் போட்டியில் காலிறுதிக்குத் தகுதி பெறும் வாய்ப்பை இழந்தது. அப்போட்டியில் இந்திய மகளிர் ஹாக்கி அணி 9-ம் இடத்தைப் பிடித்தது.
பர்மிங்ஹாமில் அரையிறுதி போட்டியில் நடுவரின் தவறான முடிவால் இந்திய ஹாக்கி வீராங்கனைகளால் சரியான மனநிலையுடன் ஆட முடியவில்லை. இதனால் தான் அரையிறுதியில் தோற்றார்கள் என நடுவர்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து சமூகவலைத்தளங்களில் ரசிகர்கள் தங்களுடைய கோபத்தை வெளிப்படுத்தியுள்ளார்கள். கடைசிவரை போராடியும் வெற்றி கிடைக்காததால் இந்திய ஹாக்கி வீராங்கனைகள் மிகவும் வேதனையடைந்தார்கள். அடுத்ததாக, வெண்கலப் பதக்கத்துக்கான ஆட்டத்தில் இந்திய மகளிர் ஹாக்கி அணி நியூசிலாந்துடன் மோதியது.
காமன்வெல்த் போட்டியில் நியூசிலாந்தை வீழ்த்தி இந்திய மகளிர் ஹாக்கி அணி வெண்கலப் பதக்கம் வென்றது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.