

இந்தியாவின் பிரபல டெஸ்ட் கிரிக்கெட் வீரர் புஜாரா ஒரே ஓவரில் 22 ரன்களை அடித்தது கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
34வயதான இந்திய கிரிக்கெட் வீரர் புஜாரா டெஸ்ட் போட்டிகளில் மிகவும் பிரபலமானவர். ராகுல் திராவிட்டுக்குப் பிறகு பொறுமையாக விளையாடும் வீரரென புகழ்பெற்றவர். இவர் தற்போது இங்கிலாந்தில் நடைபெற்றுவரும் உள்ளூர் போட்டிகளில் சசெக்ஸ் அணிக்காக விளையாடி வருகிறார்.
இதில் லியாம் நார்வெல் வீசிய 45வது ஓவரில் புஜாரா அசத்தலாக விளையாடி 22 ரன்களை குவித்தார். 50லிருந்த்து 100 ரன்களை வெறும் 22 பந்துகளில் கட்ந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது. 67 பந்துகளில் 100 ரன்களை எடுத்து அசத்தினார். இதனை கிரிக்கெட் ரசிகர்கள் சமூக வலைதளங்களில் கொண்டாடிவருகின்றனர்.
டெஸ்டில் மட்டுமே கவனம் செலுத்து வந்த புஜாரா வெள்ளை பந்து போட்டிகளில் விளையாடுவதில்லை. இவர் ஒருநாள் போட்டியில் இறுதியாக 2014 இல் விளையாடினார். இதுவரை 5 ஒருநாள் போட்டிகளில் மட்டுமே விளையாடியுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.