ஒருநாள் கிரிக்கெட்டில் சாதிக்கும் ஷுப்மன் கில்!

ஒருநாள் கிரிக்கெட்டில் சிறப்பாக விளையாடி வரும் ஷுப்மன் கில், இந்திய அணியின்...
ஒருநாள் கிரிக்கெட்டில் சாதிக்கும் ஷுப்மன் கில்!

ஒருநாள் கிரிக்கெட்டில் சிறப்பாக விளையாடி வரும் ஷுப்மன் கில், இந்திய அணியின் நம்பிக்கை நட்சத்திரமாகப் பாராட்டு பெற்றுள்ளார். 

ஜிம்பாப்வேக்கு எதிரான 3-வது ஆட்டத்தில் இந்தியா 13 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது. இதன் மூலம் ஒருநாள் தொடரை 3-0 என்ற கணக்கில் முழுமையாகக் கைப்பற்றியிருக்கிறது இந்தியா.

ஹராரேவில் நடைபெற்ற ஆட்டத்தில் முதலில் இந்தியா 50 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 289 ரன்கள் சேர்த்தது. அடுத்து ஜிம்பாப்வே 49.3 ஓவர்களில் 276 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. இந்தியாவின் ஷுப்மன் கில் ஆட்டநாயகன், தொடர்நாயகன் ஆனார். சிறப்பாக விளையாடிய 22 வயது ஷுப்மன் கில், 130 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். 97 பந்துகளில் 1 சிக்ஸர், 15 பவுண்டரிகள் அடித்தார். இது அவருடைய முதல் ஒருநாள் சதம்.

ஜிம்பாப்வே நாட்டில் அதிக ஒருநாள் ரன்களை எடுத்த இந்திய வீரர் என்கிற பெருமையைப் பெற்றுள்ளார் ஷுப்மன் கில். இதற்கு முன்பு சச்சின் டெண்டுல்கர், 1998-ல் 127* ரன்கள் எடுத்ததே சாதனையாக இருந்தது. அச்சாதனையை ஷுப்மன் கில் தாண்டியுள்ளார்.

கடந்த இரு ஒருநாள் தொடர்களிலும் சிறப்பாக விளையாடியுள்ள ஷுப்மன் கில், இந்திய அணியில் தனக்கான இடத்தை உறுதி செய்துள்ளதாகவே பலரும் கருதுகிறார்கள். அடுத்த வருடம் இந்தியாவில் ஒருநாள் உலகக் கோப்பை நடைபெறவுள்ளது. அதில் ஷுப்மன் கில் நிச்சயம் விளையாட வேண்டும் என ரசிகர்கள் விருப்பம் தெரிவித்துள்ளார்கள். போட்டி பலமாக உள்ள சூழலில் ஷுப்மன் கில்லுக்குக் கூடுதல் வாய்ப்பை வழங்க வேண்டும் என்பதே பலருடைய கோரிக்கையாக உள்ளது.

ஒருநாள் கிரிக்கெட்டில் ஷுப்மன் கில்

* 3-வது ஒருநாள் ஆட்டத்தில் இந்திய அணி...

ஷுப்மன் கில் - 130(97)
இதர பேட்டர்கள்  - 149(203)

* சமீபத்தில் நடைபெற்ற மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான ஒருநாள் தொடரில் அதிக ரன்கள் (205) எடுத்த ஷுப்மன் கில், ஜிம்பாப்வே ஒருநாள் தொடரிலும் அதிக ரன்கள் (245) எடுத்து அசத்தியுள்ளார். இரு தொடர்களிலும் தொடர் நாயகன் விருதுகளை வென்றுள்ளார். 

* கடைசி 6 ஒருநாள் ஆட்டங்களில் ஷுப்மன் கில்

64(53)
43(49)
98*(98)
82*(72)
33(34)
130(97) 

* 9 ஒருநாள் ஆட்டங்களில் இருமுறை ஆட்ட நாயகன் விருது வென்றுள்ளார் ஷுப்மன் கில்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com