பெங்களூரு அபார வெற்றி..! இறுதி ஆட்டத்துக்கு முன்னேறியதுதிருச்சி கிழக்கு உள்பட தாராபுரம், மதுராந்தகம், பெருந்துறை, அம்பாசமுத்திரம் என 5 தொகுதிகள் காலியானதாக அறிவிப்பு!உசிலம்பட்டி: மின்னல் தாக்கி 3 கூலித் தொழிலாளிகள் பலிதொகுதி நலனுக்காக அதிமுகவில் இருந்து விலகி தவெகவில் இணைந்தேன் : இசக்கி சுப்பையா விளக்கம் அதிமுக எம்.எல்.ஏ.க்களால் தவெக நம்பகத்தன்மை கெடும்: திருமாவளவன் ஜூன் 4-இல் பள்ளிகள் திறப்பு!ஆம்! +2 இயற்பியல் விடைத்தாள் மாறிவிட்டது: ஒப்புக்கொண்ட சிபிஎஸ்இ; பெற்றோர் கவலைதமிழ்நாட்டிற்கு புதிய டிஜிபி: 3 பேர் கொண்ட பட்டியலுக்கு யுபிஎஸ்சி ஒப்புதல்!9-ம் வகுப்புக்கு மும்மொழி: சிபிஎஸ்இ அறிவிப்புக்கு அண்ணாமலை எதிர்ப்பு!
/

நீரஜ் சோப்ரா அடுத்து பங்கேற்கும் போட்டி அறிவிப்பு

ஸ்விட்சர்லாந்தில் நடைபெறும் டையமண்ட் லீக் போட்டியில் பங்கேற்கவுள்ளதாக ஈட்டி எறிதல் வீரர் நீரஜ் சோப்ரா அறிவித்துள்ளார்.

News image
Updated On :24 ஆகஸ்ட் 2022, 1:58 pm IST

ஸ்விட்சர்லாந்தில் நடைபெறும் டையமண்ட் லீக் போட்டியில் பங்கேற்கவுள்ளதாக ஈட்டி எறிதல் வீரர் நீரஜ் சோப்ரா அறிவித்துள்ளார்.

டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் தடகளப் பிரிவில் இந்திய ஈட்டி எறிதல் வீரா் நீரஜ் சோப்ரா தங்கப் பதக்கம் வென்றார். இறுதிச்சுற்றில் அவா் 87.58 மீ. தூரம் எறிந்து முதலிடம் பிடித்தாா். அமெரிக்காவில் நடைபெற்ற உலகத் தடகள சாம்பியன்ஷிப் போட்டியில் ஆடவர் ஈட்டி எறிதல் இறுதிச்சுற்றில் 88.13 மீ. தூரத்துக்கு ஈட்டியை எறிந்து 2-ம் இடம் பிடித்து வெள்ளிப் பதக்கத்தை வென்றார் நீரஜ் சோப்ரா. உலகத் தடகள சாம்பியன்ஷிப் போட்டியில் பதக்கம் வென்ற 2-வது இந்தியர் நீரஜ் சோப்ரா. 2003-ல் பாரிஸில் அஞ்சு பாபி ஜார்ஜ் வெண்கலம் வென்றார். பிறகு இங்கிலாந்தில் நடைபெற்ற காமன்வெல்த் போட்டிகளில் நீரஜ் சோப்ரா காயம் காரணமாகப் பங்கேற்கவில்லை. 

இந்நிலையில் ஆகஸ்ட் 26 அன்று ஸ்விட்சர்லாந்தின் லுசானேவில் நடைபெறவுள்ள டையமண்ட் லீக் போட்டியில் பங்கேற்கவுள்ளதாகச் சமூகவலைத்தளங்களில் நீரஜ் சோப்ரா அறிவித்துள்ளார். இந்தப் போட்டியின் முடிவில் முதல் 6 இடங்களைப் பிடிக்கும் வீரர்கள், அடுத்ததாக ஜூரிச்சில் செப்டம்பர் 7-8 தேதிகளில் நடைபெறவுள்ள டையமண்ட் லீக் போட்டியின் இறுதிச்சுற்றில் பங்கேற்பார்கள். நீரஜ் சோப்ரா தற்போது 4-ம் இடத்தில் உள்ளார். இதற்கு முன்பு ஸ்டாக்ஹோம் டையமண்ட் லீக் போட்டியில் 2-ம் இடம் பிடித்தார். 

இதுவரை எல்லா முக்கியப் போட்டிகளிலும் பதக்கம் வென்றுள்ளதால் டையமண்ட் லீக் போட்டியிலும் பதக்கம் வெல்ல வேண்டும் என நீரஜ் சோப்ரா சமீபத்தில் விருப்பம் தெரிவித்திருந்தார்.  

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.