உலக பாட்மிண்டன் சாம்பியன்ஷிப்: சாய்னா நெவால் தோல்வி

உலக பாட்மிண்டன் சாம்பியன்ஷிப் போட்டியில் இந்திய வீராங்கனை சாய்னா நெவால் தோல்வியடைந்துள்ளார். 
உலக பாட்மிண்டன் சாம்பியன்ஷிப்: சாய்னா நெவால் தோல்வி
Published on
Updated on
1 min read

உலக பாட்மிண்டன் சாம்பியன்ஷிப் போட்டியில் இந்திய வீராங்கனை சாய்னா நெவால் தோல்வியடைந்துள்ளார். 

டோக்கியோவில் நடைபெற்று வரும் உலக பாட்மின்டன் சாம்பியன்ஷிப் போட்டியில் தாய்லாந்தின் புசானனை எதிர்கொண்டார் சாய்னா நெவால். இதற்கு முன்பு இருவருக்கும் இடையே நடைபெற்ற 7 ஆட்டங்களில் முதல் 3 ஆட்டங்களில் சாய்னாவும் கடைசி 4 ஆட்டங்களில் புசானனும் வெற்றி பெற்றிருந்தார்கள். 

21-17 என முதல் கேமை வென்றார் தாய்லாந்து வீராங்கனை. அடுத்த கேமை 21-16 என வென்றார் சாய்னா நெவால். இதனால் ரசிகர்கள் மிகவும் பரபரப்பானார்கள். 21-13 என அபாரமாக விளையாடி கடைசி கேமையும் ஆட்டத்தையும் வென்றார் புசானன். இதையடுத்து அவர் காலிறுதிக்குத் தகுதியடைந்தார். 

உலக பாட்மிண்டன் சாம்பியன்ஷிப் போட்டிகளில் 2015-ல் வெள்ளியும் 2017-ல் வெண்கலமும் வென்றார் சாய்னா நெவால். கடைசியாக விளையாடிய மூன்று உலக சாம்பியன்ஷிப் போட்டிகளிலும் அவரால் பதக்கம் வெல்ல முடியவில்லை. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.