பிராட் அபார பந்துவீச்சு: முதல் நாளில் தடுமாறிய தென்னாப்பிரிக்கா (ஹைலைட்ஸ் விடியோ)

இங்கிலாந்துக்கு எதிரான 2-வது டெஸ்டில் தென்னாப்பிரிக்க அணி முதல் இன்னிங்ஸில் 151 ரன்களுக்கு ஆட்டமிழந்துள்ளது. 
பிராட் அபார பந்துவீச்சு: முதல் நாளில் தடுமாறிய தென்னாப்பிரிக்கா (ஹைலைட்ஸ் விடியோ)

இங்கிலாந்துக்கு எதிரான 2-வது டெஸ்டில் தென்னாப்பிரிக்க அணி முதல் இன்னிங்ஸில் 151 ரன்களுக்கு ஆட்டமிழந்துள்ளது. 
 
இங்கிலாந்து - தென்னாப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான 2-வது டெஸ்ட், மான்செஸ்டரில் நடைபெற்று வருகிறது. டாஸ் வென்ற தென்னாப்பிரிக்க அணி பேட்டிங்கைத் தேர்வு செய்தது. இந்த டெஸ்டில் விளையாடும் 40 வயது இங்கிலாந்து வேகப்பந்து வீச்சாளர் ஆண்டர்சன், சொந்த மண்ணில் 100 டெஸ்டுகளை விளையாடும் முதல் வீரர் என்கிற சாதனையைப் படைத்துள்ளார்.

இங்கிலாந்து அணி சிறப்பாகப் பந்துவீசி முதல் இன்னிங்ஸில் தென்னாப்பிரிக்க அணியை 53.2 ஓவர்களில் 151 ரன்களுக்குச் சுருட்டியது. ரபாடா அதிகபட்சமாக 36 ரன்கள் எடுத்தார். ஆண்டர்சன், பிராட் தலா 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்கள். முதல் ஆறு பேட்டர்களின் மூன்று பேரை ஆட்டமிழக்கச் செய்தார் பிராட். இங்கிலாந்து அணி முதல் நாள் முடிவில் 28 ஓவர்களில் 3 விக்கெட் இழப்புக்கு 111 ரன்கள் எடுத்துள்ளது. கிராவ்லி 17, பேர்ஸ்டோ 38 ரன்களுடன் களத்தில் உள்ளார்கள். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com