ஆசியக் கோப்பை: நீக்கப்பட்ட வீரர் பாகிஸ்தான் அணியில் மீண்டும் சேர்ப்பு

ஆசியக் கோப்பைப் போட்டிக்கான பாகிஸ்தான் அணியிலிருந்து முகமது வாசிம் விலகியுள்ளார்.
ஆசியக் கோப்பை: நீக்கப்பட்ட வீரர் பாகிஸ்தான் அணியில் மீண்டும் சேர்ப்பு

ஆசியக் கோப்பைப் போட்டிக்கான பாகிஸ்தான் அணியிலிருந்து முகமது வாசிம் விலகியுள்ளார். இதையடுத்து ஆல்ரவுண்டர் ஹசன் அலி அணியில் சேர்க்கப்பட்டுள்ளார். 

ஆசிய கிரிக்கெட் கவுன்சில், ஆசியக் கோப்பைப் போட்டியை 1984 முதல் நடத்தி வருகிறது. 50 ஓவர், டி20 என இரு வகைகளிலும் இப்போட்டி நடைபெறும். இந்திய அணி ஆசியக் கோப்பையை ஏழு முறை வென்றுள்ளது. 2022 ஆசியக் கோப்பைப் போட்டி இலங்கையில் நடைபெறுவதாக இருந்தது. இலங்கையில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடி மற்றும் மக்களின் தொடர் போராட்டங்கள் காரணமாக இலங்கைக்குப் பதிலாக ஐக்கிய அரபு அமீரகத்தில் ஆசிய கோப்பை டி20 போட்டி இன்று முதல் நடைபெறுகிறது. செப்டம்பர் 11 வரை நடைபெறவுள்ள போட்டியில் நாளை (ஆகஸ்ட் 28) இந்தியா - பாகிஸ்தான் அணிகள் மோதுகின்றன.

இந்நிலையில் காயம் காரணமாக 21 வயது வேகப்பந்து வீச்சாளர் முகமது வாசிம், பாகிஸ்தான் அணியிலிருந்து விலகியுள்ளார். துபையில் பயிற்சியில் ஈடுபட்டிருந்தபோது வாசிமுக்கு முதுகு வலி ஏற்பட்டது. பிறகு எம்ஆர்ஐ ஸ்கேன் செய்து பார்த்ததில் காயத்தின் தீவிரத்தன்மை தெரிய வந்தது. இதையடுத்து அவரால் ஆசியக் கோப்பைப் போட்டியில் பங்குபெற முடியாத நிலைமை ஏற்பட்டுள்ளது. ஏற்கெனவே ஷாஹீன் ஷா அப்ரிடி போட்டியிலிருந்து விலகிய நிலையில் முகமது வாசிமும் தற்போது விலகியிருப்பது பாகிஸ்தானுக்குப் பின்னடைவாக இருக்கும் எனக் கருதப்படுகிறது. 

சமீபத்தில் மோசமாகப் பந்துவீசியதால் பாகிஸ்தான் அணியிலிருந்து நீக்கப்பட்டார் ஆல்ரவுண்டர் ஹசன் அலி. ஆசியக் கோப்பை, நெதர்லாந்து ஒருநாள் தொடர் அணிகளில் அவருக்கு இடம் கிடைக்கவில்லை. இந்நிலையில் ஆசியக் கோப்பைப் போட்டியில் இருந்து முகமது வாசிம் விலகியுள்ளதால் பாகிஸ்தான் அணியில் ஹசன் அலிக்கு மீண்டும் இடம் கிடைத்துள்ளது. 28 வயது ஹசன் அலி, பாகிஸ்தான் அணிக்காக 21 டெஸ்டுகள், 60 ஒருநாள், 49 டி20 ஆட்டங்களில் விளையாடியுள்ளார். ஹாரிஸ் ராஃப், ஷாநவாஸ் தஹானி, ஷா, ஹசன் அலி ஆகியோரைக் கொண்ட வேகப்பந்துவீச்சுப் படையுடன் இந்தியாவுக்கு எதிராகக் களமிறங்கவுள்ளது பாகிஸ்தான் அணி.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com